MI vs RR : நான் செஞ்சுரி அடிக்கும்போது அந்த விஷயமே தெரியல. ஆட்டநாயகன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – அளித்த பேட்டி இதோ

Yashasvi-Jaiswal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

MI vs RR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :

19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் துவக்க வீரரான ஜெய்ஷ்வால் 62 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 1000-ஆவது ஐபிஎல் போட்டியில் அசத்தலான சதத்தை அடித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Jaiswal

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் கூறுகையில் : இந்த போட்டியில் நான் சதம் அடிக்கும்போது அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது எனக்கு தெரியவில்லை. அதனால் தான் நான் தாமதமாக சதத்தை கொண்டாடினேன். எனக்கு இது போன்ற ஒரு வாய்ப்பை அளித்த கடவுளுக்கு நன்றி.

- Advertisement -

எப்பொழுதுமே நான் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தேன். அதற்காக நிறைய கடின உழைப்பையும் மேற்கொண்டு வந்தேன். அதற்கு கிடைத்த ரிசல்ட் தான் இந்த சதம். என்னுடைய மெண்டல் ஸ்ட்ரென்த் மற்றும் உடற்தகுதி மற்றும் டயட் என அனைத்தையும் மிக தீவிரமாக பின்பற்றி வருகிறேன். என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : LSG vs RCB : பெரிய காயத்தால் வெளியேறிய ராகுல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் நினைத்து ரசிகர்கள் சோகம் – என்ன நடந்தது?

அந்த வகையில் நான் ஸ்ட்ரைட் டிரைவ் மற்றும் கவர் டிரைவ் என இரண்டையுமே ரசித்து விளையாடி வருகிறேன். அந்த ஷாட்டுகளை ஒரு போட்டியில் நான் விளையாடினால் எனக்கு நம்பிக்கை கிடைக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அடித்த இந்த சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி என ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement