தோனி இப்படி பண்ணுவாருனு ராயுடுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கோ – மெகா ஏலத்தில் ராயுடு செய்ததை கவனிச்சீங்களா?

Rayudu
- Advertisement -

சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி இந்த 15-வது ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் வேளையில் திடீரென அவரது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். மேலும் சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 40 வயதை கடந்த தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சென்னை அணிக்காக விளையாடுவார்.

Dhoni

- Advertisement -

இதனால் இந்த ஆண்டு தோனி கேப்டனாக செயல்பட்டு வெற்றிகரமாக அணியை கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது 40 வயதாகும் தோனி இப்படி திடீரென கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடவுள்ளார்.

ஆனால் அவர் அப்படி முழுநேர பேட்ஸ்மேனாக அணியில் விளையாடுவது சாதாரண காரியம் அல்ல. ஏனெனில் கடந்த இரண்டு சீசன்களில் அவரது பேட்டிங் பார்ம் மோசமாக உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி அவர் 114 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். கேப்டனாக இருந்தால் மட்டுமே அவர் அணியில் நீடிக்க முடிந்தது என்றே கூறலாம்.

Rayudu

ஒருவேளை இத்தொடரில் அவரது பேட்டிங் பார்ம் தொடர்ந்து மோசமாக இருந்தால் அவரை அணியிலிருந்து நீக்க கூட கட்டாயம் ஏற்படலாம். அப்படி அவர் நீக்கப்படும் பட்சத்தில் அடுத்த விக்கெட் கீப்பராக யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழலாம். இவை அனைத்தையும் முன்கூட்டியே யோசித்தபடி தற்போது ராயுடு செய்த ஒரு விடயம் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த விடயம் யாதெனில் மெகா ஏலத்தின்போது தனது பெயரினை பதிவு செய்திருந்த ராயுடு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று பதிவு செய்திருந்தார். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வந்தாலும் இம்முறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : தோனியிடமிருந்து கற்றுக்கொண்ட இந்த விஷயம் கோப்பையை வெல்ல போதுமானது – ஆர்சிபி கேப்டன் டு பிளேஸிஸ்

அவர் தனது பெயரினை அப்படி பதிவு செய்திருந்தது தோனி இப்படி செய்வார் என்று ஏற்கனவே அவர் அறிந்தது போல உள்ளது என்ற என்று சில கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன. ஒருவேளை ஒரு சில போட்டிகள் தோனி விளையாடாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டால் அந்த போட்டியில் ராயுடு விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement