தோனியிடமிருந்து கற்றுக்கொண்ட இந்த விஷயம் கோப்பையை வெல்ல போதுமானது – ஆர்சிபி கேப்டன் டு பிளேஸிஸ்

Faf
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சந்திக்கின்றன. இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் சென்னை உட்பட அனைத்து அணிகளும் தீவிரமான வலை பயிற்சிக்குப் பின் தயாராக உள்ளன. குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் முழுமூச்சுடன் போராட உள்ளன.

Faf

- Advertisement -

அந்த வகையில் இதுநாள் வரை எவ்வளவோ முயற்சித்தும் ஒரு முறை கூட கோப்பையை தொட முடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த வருடம் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள பப் டு பிளேஸிஸ் தலைமையில் புதிய ஜெர்ஸியுடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்க உள்ளது. இதற்கு முன் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டானியல் வெட்டோரி, விராட் கோலி என எத்தனையோ ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்யப்பட்ட போதிலும் அந்த அணியால் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

குறிப்பாக 2013 – 2021 வரை நீண்ட நாட்களாக முழுமூச்சுடன் கோப்பையை முத்தமிட போராடிய விராட் கோலி கடைசிவரை அந்த முயற்சியில் தோல்வி அடைந்ததால் கடந்த வருடத்துடன் கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரராக விளையாட உள்ளார்.

faf

தோனியின் மூளையை பற்றி கற்றுள்ளேன்:
எனவே இந்த வருடம் டு பிளேஸிஸ் தலைமையில் முதல் கோப்பையை பெங்களூரு முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பும் அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முந்தைய சீசன்களில் சென்னை அணியில் விளையாடி அதன் கேப்டன் எம்எஸ் தோனியை அருகில் இருந்து பார்த்த அனுபவம் பெங்களூர் அணிக்கு முதல் கோப்பையை வெல்வதற்கு உதவும் என புதிய கேப்டன் டு பிளசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது சென்னை அணியில் இருந்து வெளியே வந்துள்ளேன் என்றாலும் அந்த அணியில் எம்எஸ் தோனியின் தலைமையில் நீண்ட நாட்கள் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். போட்டிகளின் போது இக்கட்டான சூழ்நிலையில் அவரின் கிரிக்கெட் மூளை எவ்வாறு செயல்படும், ஒரு கடினமான தருணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை அவரின் அருகிலிருந்து பார்த்துள்ளேன். அதற்காக நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என கூறினார்.

அவர் கூறுவது போல கடந்த 2012 – 2021 வரை சென்னை அணியில் முக்கிய வீரராக விளையாடி வந்த டு பிளேஸிஸ் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றினார். இந்த காலகட்டங்களில் தோனிக்கு மிக அருகில் இருந்து அவர் எவ்வாறு கேப்டன்ஷிப் செய்வார், கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாண்டு வெற்றிகளை பெற்றுத் தருவார் போன்ற அம்சங்களை கற்றுள்ளதாக தெரிவித்துள்ள டு பிளேஸிஸ் அதை பெங்களூரு அணிக்கு கேப்டன்ஷிப் செய்யும்போது பயன்படுத்த உள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

- Advertisement -

கடந்த 2008 முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த எம்எஸ் தோனி சமீபத்தில் அந்தப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். மொத்தம் 12 சீசன்களில் சென்னையை வழிநடத்திய அவர் 11 முறை அந்த அணியை பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று அதில் 9 முறை இறுதிப் போட்டிகளில் விளையாட வைத்து அதில் 4 கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரிடமிருந்து கற்ற நுணுக்கங்கள் கண்டிப்பாக தமக்கு உதவும் என டு பிளேஸிஸ் கூறியதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்றே கூற வேண்டும்.

Faf

பிளெமிங், டீ வில்லியர்ஸ்:
“அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்த ஸ்டீபன் பிளமிங் தற்போது மிகச் சிறந்த பயிற்சியாளராக மாறியுள்ளார். அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு நீண்ட நாட்கள் கேப்டன்ஷிப் செய்த ஏபி டிவிலியர்ஸ் தலைமையிலும் நான் விளையாடி உள்ளேன். இது போன்ற ஜாம்பவான்கள் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு திறமைகள் உள்ளன. எனவே அதில் சிறந்த பண்புகளை கற்று கொண்டு எனது ஸ்டைலில் பெங்களூர் அணிக்கு கேப்டன்ஷிப் செய்ய உள்ளேன்” என இதுபற்றி டு ப்ளஸ்ஸிஸ் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி 4 கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ் போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து கடந்த காலங்களில் பாடங்களை கற்றுள்ளதாக கூறும் டு பிளேஸிஸ் அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து தனது ஸ்டைலில் பெங்களூர் அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வதற்கு பாடுபடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மும்பை அணியில் அவர் ஆடுவாரா? மாட்டாரா?ன்னு நான் இப்போ எதும் சொல்லமுடியாது – ரோஹித் சர்மா

மேலும் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டுள்ள டு பிளசிஸ் உண்மையாகவே பெங்களூர் அணிக்கு இந்த முறை கோப்பையை வென்று கொடுக்கும் திறமையை பெற்றுள்ளார் என்றே கூறலாம்

Advertisement