மும்பை அணியில் அவர் ஆடுவாரா? மாட்டாரா?ன்னு நான் இப்போ எதும் சொல்லமுடியாது – ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக துவங்கவுள்ளது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் இருபத்தி ஏழாம் தேதி (மார்ச் 27) டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி விளையாடுகிறது.

MIvsDC

- Advertisement -

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. பெரும்பாலும் மும்பையை சுற்றியே போட்டிகள் நடைபெற உள்ளதால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த கருத்தை தற்போது மறுத்து பேசியுள்ள ரோஹித் கூறுகையில் :

நாங்கள் என்னதான் மும்பை அணிக்காக விளையாடினாலும் எங்கள் அணியில் உள்ள 70-80 சதவீத வீரர்கள் மும்பை மைதானத்தில் விளையாடியது கிடையாது. அதோடு இரண்டு ஆண்டுகள் கழித்து தான் தற்போது இங்கு விளையாட வந்துள்ளோம். எனவே மும்பை மைதானம் எங்களுக்கு சாதகம் என்பது என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் அணியில் உள்ள ஒரு சிலர் மட்டுமே மும்பை மைதானத்தில் தொடர்ந்து விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு கூடுதல் அனகூலம் உள்ளது என்ற பேச்சிக்கெல்லாம் இடமில்லை என்று கூறினார்.

sky

மேலும் மும்பை அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் இந்த ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் : அன்மையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரானது துவங்கும் முன்னரே காயம் காரணமாக அந்த தொடரை சூர்யகுமார் யாதவ் தவறவிட்டார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தனது சிகிச்சையை மேற்கொண்ட அவர் இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற தகவலை தற்போது நான் உங்களிடம் சொல்ல முடியாது.

இதையும் படிங்க : ஜடேஜா தலைமையிலான சி.எஸ்.கே அணியில் களமிறங்கப்போகும் 11 பேர் இவர்கள்தான் – உத்தேச அணி இதோ

முடிந்த அளவிற்கு சீக்கிரம் அவரை அணிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறோம். அவர் முழு உடல் தகுதி பெற்று விட்டார் என்ற ஒப்புதல் கிடைத்ததும் அணியில் இணைந்து விடுவார் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement