ஜடேஜா தலைமையிலான சி.எஸ்.கே அணியில் களமிறங்கப்போகும் 11 பேர் இவர்கள்தான் – உத்தேச அணி இதோ

CSK
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகப்புகழ் பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை பார்ப்பதற்கு 25% ரசிகர்கள் மைதானத்திற்குள் நேரடியாக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த போட்டியை அனைத்து ரசிகர்களும் ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.

KKRvsCSK

- Advertisement -

உத்தேச சென்னை அணி:
இந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2022 தொடரை வெற்றியுடன் துவக்குவதற்காக இரு அணிகளும் தயாராக உள்ளன. இரு அணிகளுக்குமே இது முதல் போட்டி என்பதால் இதில் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே புள்ளி பட்டியலில் முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக போராடுவார்கள் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என நம்பலாம்.

இந்த போட்டிக்கு முன்பாக கடந்த 2008 முதல் தொடர்ந்து அபாரமாக கேப்டன்ஷிப் செய்து 4 கோப்பைகளை வென்று கொடுத்த ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி விடை பெற்றுள்ளதால் ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை அணி தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறது. அதேபோல் கொல்கத்தாவுக்கு புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் அந்த அணி தனது புதிய பயணத்தை தொடங்குகிறது. சரி இந்த போட்டிக்கு முன்பாக இப்போட்டியில் களமிறங்கி வெற்றி பெறுவதற்கு தகுதியான உத்தேச 11 பேர் கொண்ட சென்னை அணியை பற்றி பார்ப்போம்.

CSk

1. ஓப்பனிங்: சென்னையின் முதல் தொடக்க வீரராக இளம் வீரர் ருத்ராஜ் கைக்வாட் களமிறங்குவார் என உறுதியாக நம்பலாம். கடந்த வருடம் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடமும் அந்த அணியின் வெற்றிக்காக சிறப்பாக விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அவருடன் கடந்த வருடம் அவருக்கு ஈடாக 633 ரன்கள் விளாசிய பப் டு பிளேஸிஸ் தற்போது பெங்களூர் அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்.

- Advertisement -

எனவே அவரின் இடத்தில் புதிய வீரராக வாங்கப்பட்டுள்ள நியூசிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் டேவோன் கான்வே களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாக நியூசிலாந்தின் 3 வகையான போட்டிகளிலும் அவர் சிறந்த தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

Ruturaj
Ruturaj Gaikwad

2. மிடில் ஆர்டர்: 3-வது இடத்தில் காலம் காலமாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை பார்ம் இல்லாத காரணத்தால் சென்னை அணி நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. மேலும் கடந்த வருடம் அந்த இடத்தில் விளையாடி வந்த இங்கிலாந்தின் மொய்ன் அலியும் விசா காரணமாக இந்த வருடத்தின் 2-வது போட்டியில் இருந்து தான் சென்னை அணிக்கு விளையாட உள்ளார். எனவே 3-வது இடத்தில் கடந்த வருடம் ஒரு சில போட்டிகளில் விளையாடினாலும் அதில் அபாரமாக செயல்பட்ட இந்தியாவின் அனுபவ வீரர் ராபின் உத்தப்பா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

4-வது இடத்தில் வழக்கம்போல அம்பத்தி ராயுடு களமிறங்க 5-வது இடத்தில் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திரம் எம்எஸ் தோனி விளையாடுவார் என நம்பலாம். சமீப காலங்களாக பார்ம் இல்லாத காரணத்தால் இவர் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப 6, 7 ஆகிய இடங்களில் களமிறங்கினாலும் ஆச்சரியமில்லை.

Uthappa-2

3. ஆல் ரவுண்டர்கள்: சென்னையின் முதல் ஆல்-ரவுண்டராக அதன் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா சந்தேகமின்றி விளையாடுவார். கடந்த சில வருடங்களாக இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிரட்டி வரும் இவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

மேலும் சமீப காலங்களாக ரன் அடிக்க முடியாமல் திணறி வரும் எம்எஸ் தோனிக்கு பதிலாக கடைசி நேரத்தில் களமிறங்கி அவரின் இடத்தில் அபாரமாக விளையாடி சென்னையின் புதிய பினிஷராகவும் உருவெடுத்துள்ளார். அவருடன் மற்ற ஆல்-ரவுண்டர்களாக இளம் இந்திய வீரர் சிவம் துபே மற்றும் நட்சத்திர அனுபவ வீரர் ட்வைன் பிராவோ விளையாடுவார்கள் என நம்பலாம்.

Jadeja

4. பவுலர்கள்: சென்னையின் முதல் வேகப்பந்து வீச்சாளராக 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் காயத்தால் விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஒரு நல்ல அனுபவ இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் தடுமாறும் அந்த அணி சமீபத்தில் அண்டர்-19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்க்ரேக்கரை வைத்து சமாளிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவருடன் ஆடம் மில்னே மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் சென்னையின் வேகப்பந்து வீச்சை ஓரளவு பலமாக உள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கும் நடப்பு சாம்பியன் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான உத்தேச 11 பேர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே*, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் டுபே, ட்வயன் ப்ராவோ*, கிறிஸ் ஜோர்டான்*, ராஜ்வர்தன் ஹங்ரேக்கர், ஆடம் மில்னே*. (*- வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement