2011இல் யுவராஜ் மாதிரி 2023 உ.கோ ஜெயிக்க அவர் ஆல் ரவுண்டரா ஹெல்ப் பண்ணுவாரு – தரமான வீரரை ஆதரித்த ஸ்ரீகாந்த்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக செயல்பட்டு வரும் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களது மண்ணில் நடைபெறும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

yuvraj 2

- Advertisement -

இத்தனைக்கும் தரவரிசையில் மேலே இருந்து சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மிரட்டும் இந்தியா ஐசிசி உலக கோப்பையில் மட்டும் முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறுவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. பொதுவாக ஐசிசி உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் வெற்றி காண்பதற்கு ஆல் ரவுண்டர்களின் செயல்பாடுகள் இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.

ஸ்ரீகாந்த் நம்பிக்கை:
அந்த வகையில் 2011 உலக கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரம் யுவராஜ் சிங் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தி இந்தியா 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றார். எனவே அவரைப் போன்ற ஒருவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் தான் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று சொல்லலாம்.

Jadeja 1

இந்நிலையில் தற்போதைய இந்திய அணியில் யுவராஜ் போலவே இடதுகை பேட்ஸ்மேனாகவும் இடது கை பவுலராகவும் உலக அளவில் நம்பர் ஒன் ஃபீல்டராகவும் இருக்கும் ரவீந்திர ஜடேஜா இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றுவார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2011 உலகக்கோப்பை வென்ற அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவரான அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய சூழ்நிலைகளில் சில பிட்ச்கள் அதிகமாக சுழலும். மேலும் அது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இருப்பது போல ஸ்விங் மற்றும் வேகத்திற்கு அதிக சாதகமாக இருக்காது. எனவே சொந்த மண்ணில் நிலவும் இந்த சூழ்நிலைகளை பயன்படுத்துவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். குறிப்பாக 2011 உலகக் கோப்பையை நீங்கள் பார்க்கும் போது அதில் நிறைய ஆல் ரவுண்டர்கள் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினர். அந்தத் தொடரில் நம்மிடம் இருந்த மிகச்சிறந்த அணியை எம்எஸ் தோனி அபாரமாக வழி நடத்தினார்”

Srikkanth

“மேலும் அந்த உலக கோப்பையில் யுவராஜ் சிங் நம்மிடம் இருந்தார். எனவே யுவராஜ் சிங் 2011 உலகக் கோப்பையில் செயல்பட்டது போல இம்முறை ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு நமக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். அதனால் 2023 உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமெனில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2013 சாம்பியன்ஸ் ராபியில் அதிக விக்கெட்களை எடுத்து தங்கப்பந்து விருது வென்ற ரவீந்திர ஜடேஜா 2019 உலக கோப்பையில் தோனியுடன் இணைந்து வெற்றிக்கு போராடியதை யாராலும் மறக்க முடியாது.

இதையும் படிங்க:உ.கோ மைதானங்களில் மெகா அரசியல், ஜெய் ஷா’க்கு எதிராக கொந்தளிக்கும் மாநில வாரியங்கள் – ரசிகர்கள், விவரம் இதோ

அதே போல் 2023 ஐபிஎல் தொடரின் மாபெரும் ஃபைனலில் மறக்க முடியாத ஃபினிஷிங் செய்து சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அந்த வகையில் இருதரப்பு தொடர்களை விட அழுத்தம் நிறைந்த பெரிய போட்டிகளில் அசத்தும் தன்மை கொண்ட ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் யுவராஜ் போலவே செயல்பட்டு இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றும் திறமையும் தரமும் கொண்டவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement