IND vs AUS : ஒவ்வொரு பந்துலயும் ரிவியூ எடுக்க சொல்லி டார்ச்சர் பண்றாரு, இந்திய வீரர் மீது அலுத்துக்கொள்ளும் கேப்டன் ரோஹித் சர்மா

Rohith-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா 3வது போட்டியில் பரிதாபமாக தோற்றது. அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அகமதாபாத் நகரில் துவங்கியுள்ள கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடுகிறது. முன்னதாக இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது இரு அணிக்கும் பல வகைகளில் பெரிய சவாலாக இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் டிஆர்எஸ் முறையில் இரு அணியும் நம்பி எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. ஏனெனில் பந்து தாறுமாறாக திரும்புவதால் ஆர்வத்துடன் எடுக்கும் பல டிஆர்எஸ் இறுதியில் தோல்வியில் முடிகிறது. அதனால் உண்மையாகவே சில சமயங்களில் நடுவர் தவறாக தீர்ப்பு கொடுக்கும் போது டிஆர்எஸ் கையிருப்பு இல்லாத நிலைமை ஏற்படுகிறது. குறிப்பாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி டிராவிஸ் ஹெட்டை ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கினார்.

டார்ச்சர் பண்றாரு:
அதன் காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மிகவும் நெருக்கமான முடிவுகளில் நடுவர் சாதகமான தீர்ப்பு வழங்காத போது ரிவியூ எடுக்குமாறு கேப்டனிடம் ரவீந்திர ஜடேஜா மிகவும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் டிராவிஸ் ஹெட் அவுட்டானது போல் ஒருவேளை அவுட் இருக்குமோ என்ற சந்தேகத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் பேச்சைக் கேட்டு கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த 3 ரிவியூக்களும் தோல்வியில் முடிந்தது. அதனால் முதல் நாள் முடிவில் அஸ்வின் நடுவருக்கு எதிராக அவுட் கேட்க நினைத்த போது கேப்டன் ரோஹித் சர்மா டிஆர்எஸ் கையிருப்பு இல்லாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.

சொல்லப்போனால் இறுதியில் அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததால் களத்திலேயே ரவீந்திர ஜடேஜாவை ரோகித் சர்மா விளையாட்டாக திட்டியிருந்தார். இந்நிலையில் ஒவ்வொரு பந்தும் அவுட்டாக இருக்கும் என்று நினைத்து ரவீந்திர ஜடேஜா தம்மை டிஆர்எஸ் ரிவ்யூ எடுக்க சொல்லுமாறு அடிக்கடி வற்புறுத்துவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா கலகலப்புடன் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் பாடங்களை கற்று விட்டதால் இப்போதெல்லாம் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை ரிலாக்ஸ் ஆகுங்கள் என்று அது போன்ற சமயங்களில் ஜடேஜாவை அமைதிப்படுத்துவதே தமது வேலையாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி 4வது போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“குறிப்பாக ஜடேஜா. அவர் தாம் வீசும் ஒவ்வொரு பந்தையும் அவுட் என்று நினைக்கிறார். அதற்காக தீவிரமான ரியாக்சனை கொடுக்கும் அவர் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வாறு செய்வதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அந்த சமயங்களில் அவரது அருகே சென்று “கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள். உங்களது பேச்சைக் கேட்டு ரிவ்யூ எடுக்கும் போது பந்து ஸ்டம்பில் உரசினால் கூட பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான தருணங்களில் ஸ்டம்ப் மீது மோதுவதே இல்லை. அத்துடன் சில பந்துகள் லெக் ஸ்டம்ப்க்கு வெளிய பிட்ச் ஆகிறது” என்று ஜடேஜாவிடம் சொல்லி புரிய வைப்பேன்”

Rohit-Sharma

“எனவே கடந்த போட்டியில் அந்த சிறு விஷயத்தில் நாங்கள் செய்த தவறுகளை சரி செய்து இந்த போட்டியில் சரியாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். குறிப்பாக கடந்த போட்டியில் டெல்லியை விட பந்து அதிகமாக சுழன்றது. அதனால் கடந்த போட்டியில் நாங்கள் டிஆர்எஸ் ரிவியூவில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்”

இதையும் படிங்க:வீடியோ : ஸ்பெஷல் கேப் கொடுத்து வீரர்கனை நேரில் சந்தித்து பாராட்டிய இந்தியா – ஆஸி பிரதமர்கள், முழு விவரம் இதோ

“மேலும் அதில் முக்கிய பங்காற்றக்கூடிய விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்தும் புதியவர். பொதுவாகவே டிஆர்எஸ் என்பது லாட்டரி போன்றதாகும். அதை நீங்கள் சரியாக செய்தால் பெரிய பரிசு கிடைக்கும். இருப்பினும் குறைவான பவுன்ஸ் இருக்கும் இந்தியாவில் அதில் சரியாக செயல்படுவது சவாலாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அதில் சிறந்து விளங்க முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement