வீடியோ : ஸ்பெஷல் கேப் கொடுத்து வீரர்கனை நேரில் சந்தித்து பாராட்டிய இந்தியா – ஆஸி பிரதமர்கள், முழு விவரம் இதோ

IND vs AUS Modi
- Advertisement -

உலகின் டாப் 2 கிரிக்கெட் அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர்- கவாஸ்கர் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றாலும் அகமதாபாத் நகரில் மார்ச் 9ஆம் தேதியன்று துவங்கிய கடைசி போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா களமிறங்கியுள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1,32,000 ரசிகர்கள் அமரும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய சாதனை மைதானமாக நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி தூங்குவதற்கு முன்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே கிரிக்கெட் ரீதியாக கடந்த 75 வருடங்களாக நிலவி வரும் உறவை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் திரு ஆண்டனி அல்பான்ஸி ஆகியோர் அந்த விழாவில் தலைமை விருந்தினர்களாக பங்கேற்றனர்.

- Advertisement -

ஸ்பெஷல் கேப்:
மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் மைதானத்திற்கு வந்த அவர்களுக்கு மைதானத்தில் திரண்டிருந்த சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் 75 வருடங்களாக இந்தியாவுடன் கிரிக்கெட் ரீதியாக நல்ல நண்பனாக செயல்பட்டு வரும் ஆஸ்ரேலியாவை பாராட்டும் வகையில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி அவர்கள் ஆஸ்திரேலியா பிரதமருக்கு சிறப்பு பரிசை வழங்கினார். அதே போல் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு பரிசை வழங்கினார்.

அதை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டணி அல்பான்ஸி அவர்கள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் சிறப்பு தொப்பிகளை வழங்கி இருவரது கைகளையும் ஒன்றாக இணைந்து தூக்கிப் பிடித்து நட்பை வெளிப்படுத்தியது மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஆரவாரப்படுத்தியது. அதைத்தொடர்ந்து 2 அணி கேப்டன்களும் தங்களது பிரதமர்களை மைதானத்திற்குள் அழைத்து வந்து தங்களது நாட்டுக்காக விளையாடும் வீரர்களை தனித்தனியே அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

- Advertisement -

தங்களது நாட்டு வீரர்களை சிறப்பாக செயல்படுமாறு பாராட்டிய பிரதமர்கள் தனித்தனியே கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரத்தியேக வாகனத்தில் இருநாட்டு பிரதமர்களும் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி வந்தனர். அதைத்தொடர்ந்து வாசிக்கப்பட்ட இருநாட்டு தேசிய கீதத்திலும் இருநாட்டு பிரதமர்களும் மைதானத்தில் வீரருடன் வீரர்களாக நின்று மரியாதை செலுத்தினார்கள். அதன் பின் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது.

அதை தொடர்ந்து துவங்கிய போட்டியை இருநாட்டு பிரதமர்களும் இணைந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அதைத்தொடர்ந்து வழக்கமான அலுவலக பணிகளை பார்ப்பதற்காக இரு நாட்டு பிரதமர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள். உலக அளவில் மிகச்சிறந்த டாப் 2 அணிகளாக செயல்பட்டு வரும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இப்படி தங்களது நட்பை பாராட்டி கொண்ட இந்த வீடியோக்களும் நிகழ்வுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான் – விவரம் இதோ

இதை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் எப்படியாவது வென்று 2 – 2 (4) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா செயல்பட்டு வருகிறது. மறுபுறம் ஏற்கனவே தொடரை கைப்பற்றினாலும் இப்போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது.

Advertisement