IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான் – விவரம் இதோ

Mohammed-Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி வியாழக்கிழமை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றமாக அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரரான முகமது ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

IND vs AUS

- Advertisement -

ஏற்கனவே இந்தூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை (3-1) என்ற கணக்கில் கைப்பற்றுவதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினையும் உறுதி செய்யும் உத்வேகத்துடன் இந்திய அணி விளையாடுகிறது.

இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்படும் வகையிலேயே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக முகமது ஷமி இடம்பெறுகிறார் என்றும் அறிவித்தார்.

siraj

ஆனால் முகமது சிராஜ் நீக்கப்பட்டதற்கு ஓய்வு மட்டும் காரணம் இல்லை என்றே நாம் கருதலாம். ஏனெனில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடிய முஹமது சிராஜ் இதுவரை ஒரு விக்கெட்டை மட்டும்தான் இந்த தொடரில் வீழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி பேட்டிங்கில் கடைசி வீரராக களமிறங்கும் இவர் ஒரு ரன் மட்டுமே இந்த தொடரில் அடித்துள்ளார் இதன் காரணமாகவும் அவர் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, பேட்டிங்கிலும் இறுதி நேரத்தில் சற்று அதிரடி காண்பிக்கிறார். எனவே முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரே இந்த போட்டிக்கான சரியான காம்பினேஷனாக இருப்பார்கள் என்பதனாலும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் – டாஸிற்கு பிறகு அறிவித்த ரோஹித்

அதோடு இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும். அப்படி முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கும்போது சிறப்பாக விளையாடும் உமேஷ் யாதவை நீக்க முடியாது என்கிற காரணத்தினாலே தற்போது சுமாரான பார்மில் இருக்கும் முகமது சிராஜ் நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement