IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் – டாஸிற்கு பிறகு அறிவித்த ரோஹித்

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இன்று மார்ச் 9-ஆம் தேதி வியாழக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

IND vs AUS

- Advertisement -

அதன்காரணமாக இந்த போட்டியில் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோன்று ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இருப்பதினால் இந்த நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்ற ஆர்வம் காட்டும்.

அதேவேளையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது மீண்டும் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முனைப்பு காட்டும் என்பதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த நான்காவது போட்டி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Shami 1

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை கேப்டன் ரோகித் சர்மா செய்துள்ளார். அதன்படி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரரான முகமது ஷமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறுயெந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : எனக்கு ஸ்கெட்ச் போட பாத்தாரு அதான், 4வது போட்டியிலும் ஜெயிப்போம் – அஷ்வினுடான மோதல் பற்றி லபுஸ்ஷேன் ஓப்பன்டாக்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ்.பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) ரவிச்சந்திரன் அஷ்வின், 10) முகமது ஷமி, 11) உமேஷ் யாதவ்.

Advertisement