CSK : இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியில் இந்த 3 பேர் விளையாட வாய்ப்பில்லை – ரவீந்திர ஜடேஜா பேட்டி

Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 17-ஆவது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சேப்பாக்கம் மைதானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது சென்னை அணியில் உள்ள வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்த முக்கிய தகவலை அவர் வெளியிட்டார். அதன்படி அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணியில் தற்போது சில வீரர்கள் காயத்தில் தான் இருக்கின்றனர்.

ஆனாலும் ஒரு சிலர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த போட்டியில் விளையாடாத மொயின் அலி தற்போது நன்றாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் சரியாகி விடுவார். தீபக் சாகர் பற்றிய தகவல் எனக்கு தெரியவில்லை. அதேபோன்று பென் ஸ்டோக்ஸ் 5-6 நாட்களில் சரியாகிவிடுவார் என்றும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். அவர் அளித்த இந்த பதிலின் மூலம் மொயின் அலி, ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடாமல் போகவும் வாய்ப்பு உள்ளது நிரூபனமாகியுள்ளது.

Moeen Ali 1

அதேபோன்று தொடர்ந்து பேசிய அவர் : சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு இது 200-வது போட்டி. எனவே இந்த போட்டியில் நாங்கள் வெற்றியை பெற்று அவருக்கு பரிசளிக்க நினைக்கிறோம். நிச்சயம் நல்ல திட்டங்களுடன் களத்திற்கு வருவோம். திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பந்து வீசுவோம் என்றும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.

- Advertisement -

மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது நல்ல நம்பிக்கையை கொடுத்தது. எனவே இனிவரும் போட்டிகளிலும் நான் மிகச் சிறப்பாக பந்து வீசுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்று தெரிவித்தார். சென்னை மைதானம் என்றாலே ஸ்பின்னர்களுக்கு தான் சாதகம்.

இதையும் படிங்க : IPL 2023 : விராட் கோலியின் 973 ரன்கள் சாதனையை அவரால் மட்டும் தான் உடைக்க முடியும் – இளம் இந்திய வீரர் மீது சாஸ்திரி நம்பிக்கை

இந்த போட்டியில் இரு அணிகளிலுமே தகுதி வாய்ந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு பேட்ஸ்மனாக எல்லோரும் சிறப்பாக தான் விளையாட ஆசைப்படுவார்கள். சென்னை மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேனாக பவுண்டரிகளை சரியான இடைவெளியை பார்த்து அடிக்க வேண்டும். பெங்களூரில் சிக்ஸர்களை அடிப்பது போல் சென்னையில் அடிப்பது எளிதல்ல கடினமான ஒன்று என்றும் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement