CSK vs SRH : ஜெயிக்குறமோ தோக்குறமோ அதெல்லாம் மேட்டர் இல்ல. ஆனா சென்னை ரசிகர்கள் வேறமாதிரி – ஜடேஜா பூரிப்பு

Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

CSK vs SRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக நான்கு ஓவர்களை வீசிய ஜடேஜா 22 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகச்சிறப்பான முறையில் 18.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 138 ரன்கள் குவித்து ஏழ விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சின் போது அபிஷேக் சர்மா, ராகுல் திரிப்பாதி மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Jadeja 1

பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்தும், தான் பெற்ற ஆட்டநாயகன் விருது குறித்தும் பேசிய ஜடேஜா கூறுகையில் : எப்போது நான் சென்னைக்கு வந்தாலும் இங்கிருக்கும் விக்கெட்டை பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -

ஏனெனில் சென்னை மைதானத்தில் என்னுடைய பந்துவீச்சு எப்போதுமே சிறப்பாக அமைந்திருக்கிறது. அதோடு இங்கு எனக்கு நல்ல ஸ்பின் கிடைக்கும். அதோடு நான் சென்னை மைதானத்தில் எப்போது பந்து வீசினாலும் நல்ல நம்பிக்கையுடன் விக்கெட்டுகளும் கிடைக்கின்றன. என்னுடைய பந்துவீச்சை பொறுத்தவரை சேப்பாக்கத்தில் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் மட்டுமே வீசுவேன்.

இதையும் படிங்க : IPL 2023 : குயின்டன் டீ காக் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த தல தோனி, ஐபிஎல் தொடரிலும் வரலாற்று சாதனை

இங்கு வந்து விளையாடும் போது போட்டியில் ஜெயிப்பதோ தோற்பதோ எதுவுமே எனக்கு விடயம் இல்லை. ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் எப்போதுமே எங்களுக்கு அளிக்கும் ஆதரவு நெகிழ்ச்சி அடைய வைக்கிறது என ரவீந்திர ஜடேஜா பூரிப்புடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement