IPL 2023 : குயின்டன் டீ காக் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த தல தோனி, ஐபிஎல் தொடரிலும் வரலாற்று சாதனை

MS Dhoni Keeper
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 29வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் சென்னையின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் 20 ஓவர்களில் 134/7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 (26) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்த ரவீந்திர ஜடேஜா 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 135 ரன்களை துரத்திய சென்னைக்கு டேவோன் கான்வே – ருதுராஜ் கைக்வாட் ஓப்பனிங் ஜோடி ஆரம்பத்திலேயே நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தது. அதில் ருதுராஜ் 35 (30) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ரகானே 9, ராயுடு என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

தோனியின் உலக சாதனை:
இருப்பினும் மறுபுறம் அரை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 77* (57) ரன்கள் குவித்த டேவோன் கான்வே 18.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தார். மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய ஹைதராபாத்துக்கு மயங் மார்க்கண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங் செய்யாவிட்டாலும் ஃபீல்டர்களை சரியாக நிறுத்தி மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திய தோனியின் கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது.

அதை விட விக்கெட் கீப்பராக கேட்ச், ரன் அவுட், ஸ்டம்பிங்கில் ஆகியவற்றில் தோனி மின்னல் வேகத்தில் செயல்பட்டது ரசிகர்களை பாராட்ட வைத்தது. குறிப்பாக 71/2 என்ற தடுமாற்ற நிலைமையில் களமிறங்கி ஹைதராபாத்தை காப்பாற்ற முயன்ற கேப்டன் ஐடன் மார்க்ரம் மஹீஸ் தீக்சனா வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் சரியாகக் கணிக்க தவறியதால் எட்ஜ் கொடுத்த அந்த பந்து அப்படியே அதே வேகத்தில் தோனியை நோக்கி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத வேகத்தில் வந்த அந்த பந்தை தோனி அப்படியே தம்முடைய கைகளால் பிடித்து மார்க்ரம் 12 (12) ரன்களில் அவுட்டாகி செல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அதே போல் 14வது ஓவரில் மயங் அகர்வால் அடித்த ஒரு கேட்ச் நேராக வந்த போது எதிர்புறம் ஹென்றிச் க்ளாஸென் உள்ளே வந்ததால் பந்தை வீசிய ரவீந்திர ஜடேஜா பிடிக்கத் தவறினார். அதனால் கோபமடைந்த அவரை அதே ஓவரின் 5வது பந்தில் மயங் அகர்வால் இறங்கி அடிக்க முயற்சித்து தவற விட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து ஸ்டம்பிங் செய்த தோனி முந்தைய பந்தில் தவற விட்ட விக்கெட்டை அடுத்த சில பந்துகளில் ஜடேஜா எடுப்பதற்கு உதவினார். அத்துடன் 20வது ஓவரின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் சிங்கிள் எடுக்க முயற்சித்த போது பந்தைக் குறி பார்த்து எறிந்த தோனி ரன் அவுட் செய்தார்.

அப்படி விக்கெட் கீப்பராக அசத்திய அவர் நேற்றைய போட்டியில் பிடித்த கேட்ச்சையும் சேர்த்து இந்தியா, ஐபிஎல் மற்றும் உள்ளூர் என அனைத்து விதமான டி20 போட்டிகளையும் சேர்த்து 208 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன் வாயிலாக உலக டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற குயின்டன் டீ கான் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 208*
2. குயின்டன் டீ காக் : 207
3. தினேஷ் கார்த்திக் : 205
4. கம்ரான் அக்மல் : 172

இதையும் படிங்க:CSK vs SRH : சி.எஸ்.கே அணிக்கு கிடைத்த மலிங்கா இவர்தான். இளம்வீரர் குறித்து தோனி புகழாரம் – யார் இந்த வீரர்?

அத்துடன் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 200 அவுட்டுகளை செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 200*
2. தினேஷ் கார்த்திக் : 187
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 140

Advertisement