CSK vs SRH : சி.எஸ்.கே அணிக்கு கிடைத்த மலிங்கா இவர்தான். இளம்வீரர் குறித்து தோனி புகழாரம் – யார் இந்த வீரர்?

Pathirana-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

CSK vs SRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 34 ரன்களையும், திரிப்பாதி 21 ரன்களையும் குவித்தனர். அவர்களை தவிர்த்து வேறு எந்த ஒரு வீரரும் இருபது ரன்களை கூட தொடவில்லை.

இந்நிலையில் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.4 ஒவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 138 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக துவக்க வீரர் டேவான் கான்வே 77 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Matheesha Pathirana

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி இளம் வீரரான மதீஷா பதிரானாவை மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : மதீஷா பதிரானா போன்ற ஒரு பந்துவீச்சாளரின் ஆக்சனை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள சற்று நேரம் பிடிக்கும்.

- Advertisement -

ஏனெனில் அவரிடம் நிறைய வேரியேஷங்கள் உள்ளன. அதோட நல்ல வேகமும் இருக்கிறது. இதற்கு முன்னதாக நாம் மலிங்காவை பார்த்திருக்கிறோம். அவரது வித்தியாசமான ஆக்சன் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிக்கலை ஏற்படுத்தும். அதேபோன்று மதீஷா பதிரானா வித்தியாசமான ஆக்சனோடு நல்ல லைனில் வீசுகிறார். இப்படி அவர் தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசினால் அவரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக அமையும்.

இதையும் படிங்க : வீடியோ : குரு தோனியை சுற்றி நின்று ஆர்வத்துடன் பாடம் கற்ற ஹைதெராபாத் இளம் வீரர்கள் – ரெய்னா நெகிழ்ச்சி

நிச்சயம் அவர் எங்களுக்கு கிடைத்த நல்ல ஒரு திறமையான வீரர் என இலங்கையில் இருந்து வந்துள்ள இந்த குட்டி மலிங்காவை தோனி பாராட்டினார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய மதீஷா பதிரானா 22 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement