2011 வேர்ல்டுகப் பைனல்ஸ் அப்போ நான் என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா? – ஜடேஜா பேட்டி

Ravindra-Jadeja
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின் போது இலங்கை அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது தோனி மற்றும் கம்பீர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த வெற்றி இந்திய அணியின் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கும் அழைத்துச் சென்றது.

அதன்பிறகு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் தற்போது நடைபெறவுள்ள 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளதால் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடருக்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ரவீந்திர ஜடேஜா 2011-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் போது நடைபெற்ற சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் தான் என்ன செய்து கொண்டு இருந்தேன் என்பது குறித்தும் அவர் தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டியில் விளையாடும் போது எங்களுக்கு ஐபிஎல் பிராக்டிஸ் செஷன் நடைபெற இருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த பயிற்சியை நாங்கள் கேன்சல் செய்து விட்டு அனைத்து அணி வீரர்களும் ஓர் அறையில் உட்கார்ந்து இறுதி போட்டியை டிவியின் மூலம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததும் சற்று பதட்டமாகவே இருந்தது.

- Advertisement -

ஆனால் கம்பீர் மற்றும் தோனி ஆகியோரது பாட்னர்ஷிப் மேட்சை நமது பக்கம் கொண்டு வந்திருந்தது. அன்றைய இரவு என்னால் மறக்கவே முடியாது. இன்றளவும் அந்த இறுதிப் போட்டியில் என்னென்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. அந்த வெற்றி இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாமல் கோப்பைக்காக காத்திருந்த ரசிகர்களின் கனவையும் நிறைவேற்றும் வகையில் இருந்தது. உலகக்கோப்பை வென்ற நாளில் நான் அணியில் இல்லை என்றாலும் அந்த நிகழ்வை நினைத்து இன்றளவும் தான் மகிழ்வதாக ரவீந்திர ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து ஃபைனல் வரும்.. ஆனா அவங்க 2023 உ.கோ வெல்வதை நிறுத்துவது கஷ்டம்.. ப்ராட் கணிப்பு

விராட் கோலியுடன் 19 வயதுக்கு உட்பட்டோர் தொடரில் இருந்தே விளையாடி வரும் ஜடேஜா 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இடம் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து தற்போது மூன்று உலக கோப்பை தொடரிலும் இடம் பிடித்து வருகிறார். ஆனாலும் இன்றளவும் அவர் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று அந்த ஆசையை அவர் பூர்த்தி செய்வார் என்று நம்பலாம்.

Advertisement