இங்கிலாந்து ஃபைனல் வரும்.. ஆனா அவங்க 2023 உ.கோ வெல்வதை நிறுத்துவது கஷ்டம்.. ப்ராட் கணிப்பு

Stuart Broad
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கும் நிலையில் அதை வெல்வதற்காக உலகின் டாப் 10 அணிகள் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. இந்த தொடரில் 10 அணிகள் களமிறங்கினாலும் கோப்பையை வெல்வதற்கு சொந்த மண்ணில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளிடையே உச்சகட்ட போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அந்த 3 அணிகளுக்கு கருப்பு குதிரையான நியூசிலாந்து, தரமான தென்னாப்பிரிக்கா, சிறப்பான பவுலர்களை கொண்ட பாகிஸ்தான் ஆகிய அணிகள் பெரிய சவாலை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் காரணமாக அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் ஃபைனலில் விளையாடப் போகும் அணிகளை பற்றி நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.

- Advertisement -

ப்ராட் கணிப்பு:
இந்த சூழ்நிலையில் நடப்பு சாம்பியனாக 50 ஓவர்களில் 300க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்கும் திறனை கொண்டிருக்கும் இங்கிலாந்து இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயம் சொந்த மண்ணில் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதை இங்கிலாந்து போன்ற எதிரணிகளால் தடுப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி டெய்லி மெயில் பத்திரிக்கையில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து கோப்பையை தக்க வைத்தால் அது அற்புதமான வேலையின் பயனாக இருக்கும். ஆனால் எனது மேலாதிக்க உணர்வு என்னவென்றால் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் சரியான முறையில் விளையாடினால் தடுத்து நிறுத்துவது கடினமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் ஜோஸ் பட்லருக்கு நிச்சயமாக சவால் விடக்கூடிய அணியாக இருக்கின்றனர்”

- Advertisement -

“மேலும் சொந்த மண் அணியாகவும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் தொடர்ந்து பெரிய ஸ்கோர் குவிக்கும் அணியாகவும் இருக்கும் இந்தியாவை கடந்து செல்வது இங்கிலாந்துக்கு கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது போக சமீபத்திய 50 ஓவர் உலகக் கோப்பைகளை சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வென்றதாக வரலாறு பேசுகிறது. குறிப்பாக 2011இல் இந்தியா 2015இல் ஆஸ்திரேலியா 2019இல் இங்கிலாந்து வென்றன”

இதையும் படிங்க: ரோஹித் உங்க கால் பத்திரம்.. இந்த உலககோப்பையில் மிரட்டப்போகும் 5 பாஸ்ட் பவுலர்ஸ் இவங்கதான் – ஸ்டெயின்

“அதன் அடிப்படையிலும் இந்தியா கோப்பையை வெல்லும் மணியாக இருக்கிறது. மேலும் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர்களுடைய அணிக்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் ஃபிட்டாக கம்பேக் கொடுத்துள்ளது பெரிய பலமாக அமைந்துள்ளது” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய பயிற்சி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement