ரோஹித் உங்க கால் பத்திரம்.. இந்த உலககோப்பையில் மிரட்டப்போகும் 5 பாஸ்ட் பவுலர்ஸ் இவங்கதான் – ஸ்டெயின்

Dale Styen
- Advertisement -

இந்தியாவில் ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி உள்ளது. அதில் கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் நவம்பர் 19ஆம் தேதி வரை மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அந்த அணிகளுக்கு மத்தியில் சொந்த மண்ணில் ரோகித் தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. பொதுவாகவே இந்திய மண்ணில் காலம் காலமாக பெரும்பாலான மைதானங்கள் சுழலுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.

இருப்பினும் சமீப காலங்களில் ரசிகர்களை கவர்வதற்காக பெரும்பாலான மைதானங்கள் பேட்டிங்க்கு சாதகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் இதில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸில் தங்களுடைய அதிரடியான வேகத்தை உட்புகுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் வேகப்பந்து வீச்சாளர்கள் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

ஸ்டைன் தேர்வு:
அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் தங்களுடைய மிரட்டலான வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கப் போகும் டாப் 5 வேகப்பந்து வீச்சாளர்களை முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தேர்வு செய்துள்ளார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரடியிடம் உங்களுடைய காலை எல்பிடபுள்யூ ஆவதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுமாறு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை அவர் கலகலப்பான எச்சரிக்கையுடன் இந்த பட்டியலை தேர்வு செய்துள்ளார்.

அத்துடன் இந்த பட்டியலில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜை தேர்வு செய்துள்ள அவர் ஜஸ்பிரித் பும்ராவை தேர்ந்தெடுக்கவில்லை. இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையில் பார்க்க வேண்டிய என்னுடைய டாப் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்றால் இந்தியாவிலிருந்து முகமது சிராஜ். பெரிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுக்கக்கூடியவர்”

- Advertisement -

“எனக்கு மிகவும் பிடித்த ரபாடா. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவரால் இந்திய சூழ்நிலைகளிலும் பெரிய அளவில் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி சவாலை கொடுக்க முடியும். அடுத்ததாக ஷாஹீன் அப்ரிடி. ரோகித் சர்மா நீங்கள் அவரிடம் உங்களுடைய கால்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவரைத் தொடர்ந்து ட்ரெண்ட் போல்ட்”

இதையும் படிங்க: என்னோட கரியர்ல அந்த இரண்டரை வருஷம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சி – மனம்திறந்த விராட் கோலி

“நியூசிலாந்தை சேர்ந்த இவர் பந்தை ஸ்விங் செய்து பெரிய விக்கெட்டுகளை எடுக்கக் கூடியவர். அத்துடன் இவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுப்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன். இறுதியாக இங்கிலாந்தின் மார்க் வுட். இவரிடம் இருக்கும் அதிரடியான வேகமே எதிரணி வீரர்களிடம் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement