IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா

Jadeja-and-Kapil-Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது என்பதனால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சென்றடைந்து பயிற்சி போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறயிருக்கும் இந்த டெஸ்ட் தொடரானது வரும் ஜூலை 12-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரானது ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

Jadeja

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவின் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கபில் தேவ் 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

இதன்மூலம் அவரே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்று சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட் வீழ்த்தியுள்ளதால் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்தியாவின் பவுலிங் வீக்கா இருக்கு, 2023 உலக கோப்பையில் நாங்க தான் ஜெயிப்போம் – முன்னாள் பாக் வீரர் சவால்

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் கபில் தேவை பின்னுக்கு தள்ளி ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைக்க காத்திருக்கிறார். நிச்சயம் இந்த தொடரிலேயே ஜடேஜா இந்த சாதனையை படைப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement