இந்தியாவின் பவுலிங் வீக்கா இருக்கு, 2023 உலக கோப்பையில் நாங்க தான் ஜெயிப்போம் – முன்னாள் பாக் வீரர் சவால்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்த போட்டியில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2013க்குப்பின் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 2011 போல உலக கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் போராட உள்ளது. மேலும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் போட்டியிலும் இந்தியா தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக 1992 முதல் இதுவரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைகளில் 7 முறை பாகிஸ்தானை சந்தித்த அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா இம்முறையும் சொந்த மண்ணில் தங்களை தலை நிமிர வைக்குமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மறுபுறம் 30 வருடங்களாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் உலகக் கோப்பை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை இந்த பொன்னான வாய்ப்பில் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து மொத்தமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பவுலிங் வீக்:
இருப்பினும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் தவிர்த்து அந்த அணியின் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாததால் பேட்டிங் துறையும் சடாப் கான் தவிர்த்து ஸ்பின்னர் இல்லாததால் சுழல் பந்து வீச்சு துறையும் பலவீனமாகவே இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளை போல் அல்லாமல் கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரிலும் விளையாடாத பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவின் கால சூழ்நிலைகள் புதிதாகவும் சவாலாகவும் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

IND vs PAK Deepak Hooda INdia

அதனால் இம்முறையும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தி வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பேட்டிங் பலமாக இருந்தாலும் பவுலிங் பலவீனமாக இருப்பதால் இம்முறை பாகிஸ்தான் வெற்றி பெறும் என முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார். குறிப்பாக பலமான பந்து வீச்சை கொண்ட பாகிஸ்தான் இம்முறை 60% வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவின் பந்து வீச்சு கூட்டணி எப்போதுமே பலவீனமாக இருக்கிறது. குறிப்பாக அவர்களுடைய அணியில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே வேகப்பந்து வீச்சுத் துறையில் அசத்துகின்றனர். சுழல் பந்து வீச்சுத் துறையை பொறுத்த வரை ரவீந்திர ஜடேஜா இந்த உலகக் கோப்பையில் முக்கியமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன். அதே போல ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை கொடுப்பவராக இருந்தாலும் இதுவரை விளையாடுவதற்கே ஃபிட்டாக இல்லாமல் இருக்கிறார்”

ajmal

“அந்த வகையில் பாகிஸ்தான் அளவுக்கு இந்தியாவின் பவுலிங் அச்சுறுத்தலை கொடுப்பதாக இல்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவர்களுடைய பேட்டிங் எப்போதுமே வலுவாக இருக்கிறது. மறுபுறம் அதற்கு சமமாக எங்களுடைய பவுலிங் தரமானதாக இருக்கிறது. எனவே தற்சமயத்தில் நான் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெல்லுமா? என்று நீங்கள் கேட்டால் ஆம் என்று சொல்வேன். குறிப்பாக இந்த போட்டியில் வெல்வதற்கு பாகிஸ்தானுக்கு 60% வாய்ப்புள்ளது”

- Advertisement -

“எனவே பாகிஸ்தானிடம் இருக்கும் பவுலர்களை கருத்தில் கொண்டு இந்திய கால சூழ்நிலைகளில் அவர்களை நம்மால் குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தால் நிச்சயமாக வெல்ல முடியும்” என்று கூறினார். முன்னதாக 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த ஷாஹீன் அப்ரிடி தற்போது முழுமையாக குணமடைந்து பந்து வீசி வருகிறார்.

இதையும் படிங்க:இந்திய அணியில் தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. விரக்தியில் அதிரடி முடிவை கையிலெடுத்த – ப்ரித்வி ஷா

மறுபுறம் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் காயமடைந்ததால் தோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு பும்ரா இன்னும் குணமடையாமல் இருக்கிறார். இது போன்ற காரணங்களால் பலவீனமான பவுலங்கை கொண்டுள்ள இந்தியாவை இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement