இந்திய அணியில் தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. விரக்தியில் அதிரடி முடிவை கையிலெடுத்த – ப்ரித்வி ஷா

- Advertisement -

இந்திய அணிக்காக 18 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்த பிரித்வி ஷா தனது 18-வது வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை 71 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Prithvi_Shaw

- Advertisement -

அதிரடி துவக்க ஆட்டக்காரரான இவர் தனது கரியரை ஆரம்பிக்கும் போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்ததால் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோருடன் எல்லாம் ஒப்பிட்டு பேசப்பட்டார். ஆனால் நாளடைவில் இவரது பேட்டிங் ஃபார்ம் தடுமாறவே மெல்ல மெல்ல அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

இருப்பினும் உள்ளூர் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக திரும்பும் வாய்ப்பினை பெறலாம் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரின் போது சோபிக்க தவறினார்.

Prithvi-Shaw

ஆனாலும் தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள துலீப் டிராபி தொடரில் வெஸ்ட் சோன் (West Zone)அணிக்காக விளையாட தேர்வாகியிருக்கும் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என்று காத்திருந்தார். ஆனால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படவே இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த துலீப் டிராபி தொடருக்கு பின்னர் அவர் இங்கிலாந்து சென்று கவுண்டி போட்டியில் விளையாட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்திய அணியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வரும் அவர் தற்போது இங்கிலாந்து சென்று கவுண்டி போட்டிகளில் தனது திறனை நிரூபித்தால் மீண்டும் இந்திய அணியில் இழந்த வாய்ப்பினை பெறலாம் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : Ashes 2023 : கர்ட்லி ஆம்ப்ரோஸ் சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித் – இங்கிலாந்தின் சிம்ம சொப்பனமாக புதிய உலக சாதனை

அதன்படி துலீப் டிராபி இறுதிப் போட்டி ஜூலை 12 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் வேளையில் அதற்கு அடுத்து அவர் இங்கிலாந்து சென்று நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதோடு அந்த கவுண்டி போட்டிக்கு பிறகு ராயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட இருக்கிறார் என்றும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

Advertisement