Ashes 2023 : கர்ட்லி ஆம்ப்ரோஸ் சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித் – இங்கிலாந்தின் சிம்ம சொப்பனமாக புதிய உலக சாதனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து 2 – 1* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இங்கிலாந்து இந்த போட்டியிலும் அதே அணுகு முறையுடன் விளையாடி சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்வியையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

Ben Stokes 1

- Advertisement -

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை விளையாடி பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து உங்களையும் அடிப்போம் என்று இத்தொடரின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவை எச்சரித்தது. ஆனால் உங்களது ஆட்டமெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் வைத்துக் கொள்ளுங்கள் தரமான பவுலிங்கை கொண்ட எங்களிடம் செல்லுபடியாகது என்று ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஸ்மித் உலக சாதனை:
அதை இத்தொடரின் ஆரம்பம் முதலே செயலிலும் காட்டி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதைப் போல 20 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையை வெல்லும் கனவை நெருங்கியுள்ளது. மேலும் 2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 110 ரன்கள் குவித்து சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்ஸிலும் 34 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Steve-Smith

குறிப்பாக தன்னுடைய 32வது சதத்தை 174 இன்னிங்ஸிலேயே அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அந்த 32 சதங்களில் 12 சதங்களை இங்கிலாந்துக்கு எதிராக அடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையும் படைத்தார். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற ஜேக் ஹோப்ஸ் (தலா 12) என்ற சாதனையும் அவர் சமன் செய்தார். அதாவது தங்களுடைய பரம எதிரியான இங்கிலாந்துக்கு எதிராக அவர் எப்போதுமே தொடர்ந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அதற்கு பரிசாக இந்த 2வது போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Steve-Smith

இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆம்ப்ரோஸ் 7 ஆட்டநாயகன் விருதுகள் வென்றுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக மொத்தமாக 8 ஆட்டநாயகன் விருதுகளை வென்று ஸ்டீவ் ஸ்மித் இந்த புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஸ்டீவ் ஸ்மித் : 8*, இங்கிலாந்துக்கு எதிராக
2. கர்ட்லி ஆம்ப்ரோஸ் : 7
3. குமார் சங்ககாரா : 6, பாகிஸ்தானுக்கு எதிராக
4. இயன் போத்தம் : 6, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

இதையும் படிங்க:இந்தியா – பாக் மேட்ச்ல தரம் இல்ல, உண்மையாவே நமக்கு அது தான் சாவலான 2023 உ.கோ போட்டி – கங்குலி பேட்டி

முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனிலிலும் சதமடித்து 121 ரன்களை விளாசி இந்தியாவை தோற்கடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 9113 ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்குள்ளாகவே 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் ஏற்கனவே படைத்திருந்தார். மொத்தத்தில் நவீன கிரிக்கெட்டில் வெள்ளைப் பந்து போட்டிகளில் தடுமாறினாலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி போன்றவர்களை காட்டிலும் மகத்தான வீரராக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டு வருகிறார் என்றால் மிகையாகாது.

Advertisement