இந்தியா – பாக் மேட்ச்ல தரம் இல்ல, உண்மையாவே நமக்கு அது தான் சாவலான 2023 உ.கோ போட்டி – கங்குலி பேட்டி

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பிய தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2013க்குப்பின் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கு நிகராக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் போட்டியில் வென்று கௌரவத்தை மானத்தையும் காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் வழக்கம் போல உச்சமாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகிறது. மேலும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் மோதுவதால் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மோதும் அனல் பறக்கும் என்பதாலேயே உலக அளவில் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 1992 முதல் இதுவரை நடைபெற்ற 7 உலகக் கோப்பை போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.

கங்குலி கருத்து:
அந்த வரிசையில் இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் வென்று இந்தியா தன்னுடைய கௌரவத்தை தொடர்ந்து தக்க வைக்கப் போராட உள்ளது. மேலும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை சரித்திர இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றிய விராட் கோலி பாகிஸ்தானை தோற்கடிக்க உதவியது மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தது.

IND-vs-AUS-1

மறுபுறம் 2021 டி20 உலக கோப்பையில் தோற்கடித்தது போல 50 ஓவர் உலகக் கோப்பையில் 30 வருடங்களாக சந்தித்து வரும் அவமான தோல்விகளை இம்முறை நிறுத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்க உள்ளது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிர்பார்ப்பு மற்றும் விளம்பரங்களில் மட்டுமே அது உயரத்தில் இருக்கிறதே தவிர தரத்தின் அடிப்படையில் சாதாரண போட்டியாகவே இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு தலைப்பட்சமாக வென்று வருவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே 5 கோப்பைகளை வென்று வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியை இந்தியாவுக்கு இத்தொடரில் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டிக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் நீண்ட காலமாக இவ்விரு அணிகளில் மோதும் போட்டிகளில் தரம் என்பது அந்தளவுக்கு சிறப்பாக இல்லை”

Sourav Ganguly

“ஏனெனில் இந்தியா அதில் தொடர்ந்து ஒருதலைபட்சமாக வென்று வருகிறது. சொல்லப்போனால் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் தான் இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் தோற்கடித்தது. அந்த டி20 உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை. எனவே என்னை பொறுத்த வரை இந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியே சிறந்ததாக இருக்கும். ஏனெனில் அதில் தான் தரம் சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:2023 உலககோப்பையும் தவறவிட இருக்கும் நட்சத்திர வீரர் – அடுத்த ஐ.பி.எல் க்கு தான் விளையாட வருவாராம்

அவர் கூறுவது போல எதிர்பார்ப்பில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி பெரிதாக இருந்தாலும் தரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியே முதன்மையானதாக இருக்கும் எனலாம். குறிப்பாக இந்தியா ஐசிசி தொடரை வெல்ல வேண்டுமெனில் முதலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அடிக்கடி சொல்வார். அந்தளவுக்கு தரமான ஆஸ்திரேலியாவை இத்தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா எதிர்கொண்டு மிகப்பெரிய சவாலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement