பண்ட், தோனி, கபில்தேவ் என 3 பேரையும் தாண்டி 35ஆண்டு கால சாதனையை உடைத்து புதிய சாதனை – ஜடேஜா அபாரம்

Jadeja
- Advertisement -

இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 4 ஆம் தேதி துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா 29 ரன்களும் மயங்க் அகர்வால் 33 ரன்களும் எடுத்து சுமாரான தொடக்கம் கொடுத்தனர்.

INDvsSL cup

- Advertisement -

இதை அடுத்து 100வது போட்டியில் களமிறங்கிய 12வது இந்திய வீரராக சாதனைப் படைத்த விராட் கோலி இப்போட்டியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி 58 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிரட்டிய ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா:
இதனால் 175/4 என தடுமாறிய இந்தியாவை அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்கள். இதில் ஒருபுறம் ரவீந்திர ஜடேஜா நிதானமாக பேட்டிங் செய்ய மறுபுறம் சரவெடியாக வெடித்த ரிஷப் பண்ட் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு இலங்கை பவுலர்களை பந்தாடினார். தொடர்ந்து பட்டையை கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 97 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென அவுட்டாகி 4 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்து வந்த ஜடேஜா 45* ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்தியா 357/6 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Jadeja

மாஸ் காட்டிய ரவீந்திர ஜடேஜா:
இதை அடுத்து இன்று துவங்கிய 2வது நாளில் ரவீந்திர ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன் பங்கிற்கு இலங்கையை வெளுத்து வாங்கினார். 6வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்து இந்தியாவை மேலும் வலுப்பெற செய்த இந்த ஜோடியில் 82 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் தொடர்ந்து இலங்கை பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தார். அப்போதாவது அவர் அவுட்டாகி விடுவாரா என எதிர்பார்த்த இலங்கை பவுலர்களை மேலும் பந்தாடிய ரவீந்திர ஜடேஜா நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்து 228 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 மெகா சிக்ஸர்கள் உட்பட 175* ரன்கள் குவித்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நோக்கி நெருங்கினார். ஆனால் அந்த நேரத்தில் 574/8 ரன்களை எடுத்திருந்த இந்தியாவிற்கு இந்த ரன்கள் போதும் என நினைத்த கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். மொத்தத்தில் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் அபாரமாக பேட்டிங் செய்த இந்தியாவிற்கு எதிராக இலங்கை பவுலர்கள் சுமாராக பந்து வீசினார்கள்.

Ravindra Jadeja

கபில் தேவை முந்தி சூப்பர் சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் 7வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா இலங்கை பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டு 175* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7-வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனையை அவர் படைத்தார். கடைசியாக கடந்த 1986ஆம் ஆண்டு இதை இலங்கைக்கு எதிராக கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜாம்பவான் கபில்தேவ் 163 ரன்கள் குவித்ததே இதுநாள்வரை சாதனையாக இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது 35 வருடங்கள் கழித்து அந்த சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 7வது இடத்தில் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1. 175* ரன்கள் – ரவீந்திர ஜடேஜா, இலங்கைக்கு எதிராக, மொஹாலி,2022*.
2. 163 ரன்கள் – கபில்தேவ், இலங்கைக்கு எதிராக கான்பூர்,1986.
3. 156 ரன்கள் – ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி, 2019.

இதையும் படிங்க : ஷேன் வார்ன் மறைவிற்காக இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் செய்த செயல் – நெகிழ்வைத்த தருணம்

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 5000+ ரன்களையும் 400+ விக்கெட்டுகளையும் எடுத்த 2-வது இந்திய ஆல் ரவுண்டர் என்ற மகத்தான பெருமையை ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.

Advertisement