
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து முறை ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான அணியாக பார்க்கப்படும் சி.எஸ்.கே அணி இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளது. தோனி தலைமையில் கடந்த பல ஆண்டுகளாகவே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிகளுக்கு எப்போதும் ஒரு பக்க பலமாக இருந்து வந்த ரவீந்திர ஜடேஜா தற்போது டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
ஆனாலும் தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்கிற வேளையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் சென்னை அணி எப்படியும் ஜடேஜாவை தக்கவைக்கும். ஆனால் இம்முறை அவரது சம்பளம் பாதியாக குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் கடந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற்ற போது தோனி தானாக முன்வந்து தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் ரவீந்திர ஜடேஜாவிற்கு 16 கோடி என்கிற பெரிய தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணிக்காக பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமலும், விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமலும் தடுமாறி வருகிறார். இதன் காரணமாக 16 கோடி என்கிற அவரது சம்பளம் 8 கோடியாக குறைக்கப்பட்டு சென்னை அணியின் மூன்றாவது அல்லது நான்காவது வீரராக தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 14 கோடிக்கு வொர்த் இல்ல.. மெகா ஏலத்திற்கு முன்னர் வெளிநாட்டு வீரரை கழட்டிவிட இருக்கும் சி.எஸ்.கே – யார் தெரியுமா?
சென்னை அணி தக்க வைக்கும் முதல் நான்கு வீரர்களின் யார்? யார்? இடம் பெறுவார்கள் எந்தெந்த வீரர்கள் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்கிற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன. இருப்பினும் மெகா ஏலம் அருகில் வரும் போது நிச்சயம் சென்னை அணி இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.