14 கோடிக்கு வொர்த் இல்ல.. மெகா ஏலத்திற்கு முன்னர் வெளிநாட்டு வீரரை கழட்டிவிட இருக்கும் சி.எஸ்.கே – யார் தெரியுமா?

CSK
- Advertisement -

கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முன்னதாக தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை நியமித்தார்.

அப்படி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில் தற்போது தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் சென்னை அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தோனி தன்னுடைய ஊதியத்தை குறைத்துக் கொண்டு இந்த தொடரில் விளையாடுவார் என்றும் சென்னையில் உள்ள பல்வேறு வீரர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் வாங்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியில் கடந்த ஆண்டு 14 கோடி ரூபாய் என்கிற பெரிய விலைக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து அணியை சேர்ந்த அதிரடி வீரரான டேரல் மிட்சலை ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணி கழட்டி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 318 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

இதையும் படிங்க : 156 கி.மீ வேகத்தில் அந்த ஆஸி வீரரை பயமுறுத்திட்டாரு.. மயங் யாதவ் விளையாட அதுவே போதும்.. பராஸ் மாம்ப்ரே

இது ஓரளவுக்கு நல்ல செயல்பாடு தான் என்றாலும் அவ்வளவு பெரிய தொகைக்கு சமமாக பார்க்கப்படவில்லை. எனவே ஏலத்திற்கு முன்னதாக டேரல் மிட்சலை விடுவித்துவிட்டு பின்னர் மெகா ஏலத்தின் போது குறைந்த விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் பல வீரர்களின் அணி மாற்றம் நடைபெற இருப்பதால் இந்த மெகா ஏலமானது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement