IND vs BAN : வங்கதேச கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடர் நாளை நவம்பர் 25-ஆம் தேதி துவங்கி எதிர்வரும் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஒருநாள் தொடர் முடிவடைந்த பின்னர் அதன்பிறகு இந்திய அணி வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

INDia Hardik pandya

- Advertisement -

அப்படி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர்நது நெருங்கி வேளையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய பல சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து பங்களாதேஷ் தொடரில் அவர்கள் மீண்டும் முதன்மை அணியில் இணைய உள்ளனர்.

Ravindra-Jadeja

இந்நிலையில் இந்த பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளதாக தற்போது தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளன. அந்த வகையில் ஏற்கனவே தனது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர என இரண்டையும் தவறவிட்ட ஜடேஜா நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இடம்பெறவில்லை.

- Advertisement -

ஆனால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த தொடரில் கட்டாயம் அணியில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் அவருடைய காயம் குணமடைய இன்னும் சில காலம் தேவைப்படும் என ஜடேஜா தரப்பிலிருந்து பிசிசிஐக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜடேஜாவின் உடல் நிலையை கருத்தில் கொண்ட பிசிசிஐ-யும் அவரை இந்திய அணியில் இருந்து நீக்கியுள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : சென்னை அணி கழற்றி விட்ட வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய 4 வீரர்களின் பட்டியல் இதோ

இதன் காரணமாக நியூசிலாந்து தொடரை அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான தொடரையும் ஜடேஜா தவற விட இருக்கிறார். எனவே எதிர்வரும் வங்கதேச தொடரிலும் அக்சர் பட்டேல் தான் ஜடேஜாவின் இடத்தில் களமிறங்கி விளையாடுவார் என்பது உறுதி.

Advertisement