IPL 2023 : சென்னை அணி கழற்றி விட்ட வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய 4 வீரர்களின் பட்டியல் இதோ

bravo
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக போற்றப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை தங்களது கேப்டன் தோனியையும் சண்டை என்று வந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில் ரவீந்திர ஜடேஜாவையும் டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட் போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்களை மீண்டும் தக்க வைத்துள்ளது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

இருப்பினும் ஓய்வு பெற்ற ராபின் உத்தப்பா உள்ளிட்ட 8 வீரர்களை அந்த அணி விடுவித்துள்ளது. ஆனால் அவர்களின் சில வீரர்கள் நல்ல திறமையும் அனுபவமும் பெற்றிருப்பதால் விரைவில் நடைபெறும் ஏலத்தில் பெரிய தொகைக்கு விலைபோக வாய்ப்புள்ளது. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

4. கிறிஸ் ஜோர்டான்: இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்த வருடம் சென்னைக்காக விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

jordan 2

அதனால் அவரை விடுவித்து சென்னை சரியான முடிவு எடுத்துள்ளது என்று சொன்னாலும் ஏற்கனவே 100 டி20 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 2022 டி20 உலக கோப்பையில் ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற முக்கிய பவுலர்கள் இல்லாத குறையை போக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் மவுசு குறையாத இவரை ஏலத்தில் பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு சென்னை தவிர்த்து பெரும்பாலான அணிகள் போட்டி போடும் என்று நம்பலாம்.

- Advertisement -

3. ஆடம் மில்னே: நியூசிலாந்தை சேர்ந்த அதிரடி வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்த வருடம் சென்னைக்காக வெறும் ஒரு போட்டியில் விளையாடி துரதிஷ்டவசமாக காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் தீபக் சஹர் அடுத்த சீசனில் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் சென்னை விடுவித்துள்ள இவர் டி20 கிரிக்கெட்டில் 132 போட்டிகளில் 142 விக்கெட்களை 7.74 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து நல்ல திறமையும் அனுபவமும் தரமும் கொண்ட பவுலராக திகழ்கிறார்.

Milne

அதன் காரணமாக விரைவில் நடைபெறும் ஏலத்தில் நிச்சயமாக இவரை பெரிய கோடிகளை கொடுத்து வாங்குவதற்கு சென்னை உட்பட அனைத்து அணிகளும் கடுமையாக போட்டி போடும் என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

2. நாராயண் ஜெகதீசன்: பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு சமீப காலங்களாகவே தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வரும் சென்னை நிர்வாகம் கடந்த சில சீசன்களாக இவரை வெறும் 20 லட்சத்துக்கு வாங்கி 7 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு கொடுத்து பெரும்பாலும் பெஞ்சில் அமர வைத்து கழற்றி விட்டது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் 277 ரன்களை விளாசி தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து இரட்டை உலக சாதனைகளை படைத்த இவர் உலக அளவில் தனது திறமையை நிரூபித்தார்.

Jagadeesan 1

அதன் காரணமாக விரைவில் நடைபெறும் ஏலத்தில் இவர் நிச்சயமாக ஒரு கோடிக்கும் மேல் விலைபோவார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அதிரடி தொடக்க வீரரான இவரை வாங்குவதற்கு இதர அணிகளும் கடுமையாக போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக சென்னை மீண்டும் முயற்சித்தாலும் இவரை வாங்க முடியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. அதைத்தான் தமிழக ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

1. ட்வயன் ப்ராவோ: கடந்த பல வருடங்களாக சென்னை அணியின் சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றி விஸ்வாசியாக செயல்பட்டு வந்த இவரை அந்த அணி கழற்றி விட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் சென்னை உட்பட உலகில் நடைபெறும் அத்தனை டி20 தொடர்களையும் சேர்த்து 549 போட்டிகளில் விளையாடி 500+ விக்கெட்டுகளை எடுத்த பவுலராக உலக சாதனை படைத்துள்ள இவர் அற்புதமான அனுபவத்தை பெற்றுள்ளார்.

Bravo

குறிப்பாக ஸ்லோ, கட்டர் போன்ற பந்துகளை கரைத்துக் குடித்த இவரை டி20 கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் என்று சொல்லலாம். இருப்பினும் 39 வயதை கடந்து விட்டார் என்பதற்காக சென்னை விடுவித்துள்ள இவருடைய மவுசு எப்போதும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் இந்த பழைய சரக்கின் ருசியை தெரிந்த சென்னை உட்பட அனைத்து அணிகளும் பெரிய தொகை கொடுத்து இந்த ஏலத்தில் வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement