உங்களை விட அசத்தும் அவர் போதும், இந்தியாவுக்கு இனிமேல் நீங்க தேவையில்ல – கம்பீரின் விமர்சனத்துக்கு ஜடேஜா பதில்

- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி 2 – 0* (3) என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அடங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. ஆனால் இந்த அணியிலும் ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் இடம் பெறவில்லை.

குறிப்பாக தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் ரவீந்திர ஜடேஜா 2022 ஆசிய கோப்பையில் காயமடைந்ததால் டி20 உலக கோப்பையில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாதது அந்த 2 தொடர்களிலும் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் அவர் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகிறது. அதே சமயம் தமது மனைவி அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அதற்கு ஆதரவாக செயல்படுவதற்காக ஜடேஜா இந்திய அணியில் விளையாடவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அந்த நிலைமையில் அவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற அக்சர் படேல் அவரையும் மிஞ்சும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தையும் பிடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக நடைபெற்ற முடிந்த இலங்கை டி20 தொடரில் 3 போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் முக்கிய நேரத்தில் கச்சிதமாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றிய அக்சர் பட்டேல் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் நல்ல பங்காற்றி வருகிறார்.

ஜடேஜாவின் பதில்:
அதனால் அடுத்ததாக பிப்ரவரி மாதம் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 தொடர்களிலுமே ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை பிடிக்கும் அளவுக்கு அக்சர் படேல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அடுத்து வரும் முக்கிய தொடர்களில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் தான் இந்தியாவுக்கு சரியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் ஜடேஜாவுக்கு மேலே அக்சர் படேலை வைத்திருப்பேன். ஏனெனில் அவர் அதன் பின் கிடைத்த வாய்ப்புகளில் எந்த தவறையும் செய்யவில்லை” என்று கூறினார். அத்துடன் 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோர் இளம் ஸ்பின்னர்கள் விளையாட தகுதியானவர்கள் என்று தேர்வு செய்த கௌதம் கம்பீர் ரவீந்திர ஜடேஜாவை கழற்றி விட்டுள்ளார்.

அவரை போலவே இந்திய அணி நிர்வாகமும் கிட்டத்தட்ட அதே மன நிலைமையில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டிலும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாத ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து விரைவாக குணமடைந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டிய வேலைகளில் ஈடுபாடு காட்டுவதை விட அரசியலில் களமிறங்கியுள்ள தனது மனைவிக்கு ஆதரவு கொடுக்கும் வேலைகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

- Advertisement -

அதனால் 2022 ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து வந்த ராகுல் பார்மை இழந்து திண்டாடுவதைப் போல் அவரும் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் எந்தளவுக்கு ஃபார்மில் இருக்கிறார் என்பது தெரியாது. எனவே மிக விரைவாக கம்பேக் கொடுத்து அசத்தலாக செயல்பட்டால் மட்டுமே உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமைக்கு ரவீந்திர ஜடேஜா தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அஷ்வினையும் இந்தியாவையும் ஒரு கை பாக்க திட்டம் தயார் – இப்போதே சவாலை விடுத்த உலகின் நம்பர் ஒன் ஆஸி பேட்ஸ்மேன்

இந்நிலையில் கௌதம் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் “எதுவும் சொல்ல வேண்டாம். ஜஸ்ட் சிரியுங்கள்” என்று ஜடேஜா மறைமுகமான பதிலை கொடுத்துள்ளார். அதாவது எதுவும் பேசாமல் விரைவில் கம்பேக் கொடுத்து செயல்பாடுகளால் பதிலடி கொடுப்பேன் என்று ஜடேஜா மறைமுகமாக கூறியுள்ளார். முன்னதாக என்னதான் அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டாலும் பாண்டியா, பும்ரா போன்றவர்களைப் போல் தனது திறமையை நிரூபித்துள்ள ஜடேஜா மீண்டு வரும் போது தனக்கான இடத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement