அஷ்வினையும் இந்தியாவையும் ஒரு கை பாக்க திட்டம் தயார் – இப்போதே சவாலை விடுத்த உலகின் நம்பர் ஒன் ஆஸி பேட்ஸ்மேன்

Marnus Labuschange Ravichandran Ashwin
- Advertisement -

2023 காலண்டர் வருடத்தில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சொந்த மண்ணில் வலுவான அணியாகவே கருதப்படும் இந்தியா கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

AUs vs IND

- Advertisement -

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2004க்குப்பின் சொந்த மண்ணில் தோற்காமல் வீர நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த இந்தியா ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த முதல் ஆசிய அணி மற்றும் அடுத்தடுத்த தொடர்களில் தோற்கடித்த முதல் அணி ஆகிய 2 வரலாற்று சாதனைகளை படைத்தது.

அஷ்வினுக்கு சவால்:
எனவே இம்முறையும் வெல்லும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்க ஆஸ்திரேலியா போராடவுள்ளது. அதிலும் குறிப்பாக புள்ளி பட்டியலில் ஏற்கனவே முதல் இடத்தில் இருப்பதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட அந்த அணி கடைசியாக தங்களது மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளை பரிசளித்த இந்தியாவுக்கு தற்போது அவர்களது மண்ணில் பழி வாங்க போராட உள்ளது. இந்நிலையில் அதற்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் மூத்த ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை எதிர்கொள்வதற்கு தனித்துவமான திட்டத்தை தயார் செய்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் கூறியுள்ளார்.

Ashwin

சமீப காலங்களில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 426 ரன்களை அடித்து அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். இருப்பினும் கடந்த முறை அஷ்வினிடம் 2 முறை அவுட்டான அவர் இம்முறை அதே தவறை செய்யாமல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க தயாராகி வருவதாக சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த தொடரிலிருந்தே இது பற்றி நான் நினைக்கத் துவங்கி விட்டேன். குறிப்பாக அஷ்வின் எப்படி பந்து வீசுவார், எனக்கு எதிராக எப்படி பந்து வீசினார் என்பதை கேட்டு அதற்கேற்றார் போல் தற்போது என்னுடைய திட்டங்களில் சில மாற்றங்களை செய்துள்ளேன். எனக்கு எதிரான அவருடைய சில திட்டங்களை தடுத்து தவிடு பொடியாக்கும் அளவுக்கு எனது விளையாட்டை நான் மாற்றி அமைத்துள்ளேன். எனவே இது ஒரு அழகான சதுரங்க விளையாட்டாக இருக்கும் என்பதால் இத்தொடருக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை”

Marnus

“இத்தொடருக்காக நாங்கள் தயாராகும் வேலைகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். குறிப்பாக தற்போது நாங்கள் பிக்பேஷ் தொடரில் விளையாடி வருகிறோம் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய தொடருக்கு தயாராகும் வேலைகளை நாங்கள் பல நாட்களுக்கு முன்பே துவங்கி விட்டோம். குறிப்பாக மனதளவில் எப்படி செயல்பட வேண்டும் எந்த பவுலருக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் போன்ற திட்டங்களை வகுக்க துவங்கி விட்டோம். நானும் என்னுடைய திட்டங்களை தயார் செய்து விட்டேன். இனிமேல் அதை செயல்படுத்த வேண்டியது மட்டும் தான் எஞ்சிய வேலையாகும்”

இதையும் படிங்க: கண்ணை திறந்து விட்ட ரோஹித்துக்கு நன்றி, இனிமேல் தான் என் ஆட்டத்தை பாக்க போறீங்க – ராகுல் உற்சாக பேச்சு

“குறிப்பாக எது வேலை செய்யும் எது வேலை செய்யாது. வேலை செய்யாததை எப்படி எனது ஆட்டத்திற்குள் கொண்டு வருவது போன்றவற்றை போட்டிக்கு முன்பாகவே தயார் செய்ய நாங்கள் பயிற்சி எடுத்து வருகிறோம். அதுதான் முக்கியம். அவ்வாறு தான் உங்களது பயிற்சிகளும் நடக்கும்” என்று கூறினார். இப்படி எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இத்தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement