கண்ணை திறந்து விட்ட ரோஹித்துக்கு நன்றி, இனிமேல் தான் என் ஆட்டத்தை பாக்க போறீங்க – ராகுல் உற்சாக பேச்சு

rahul 2
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியிள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 215 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நுவனிடு பெர்னாண்டோ 50 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

IND vs SL Rahul Rohit

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் ரோகித் சர்மா 17, கில் 21, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 28 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து 86/4 என தடுமாறியது. அப்போது 5வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த ஹர்திக் பாண்டியா 36 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று 6 பவுண்டரிகளுடன் 64* (103) ரன்கள் குவித்த கேஎல் ராகுல் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கண்ணை திறந்துட்டாரு:
இந்த வெற்றிக்கு குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் அழுத்தமான நேரத்தில் தடுப்பு சுவராக நின்று 64* ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்காற்றிய ராகுல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டை அள்ளினார். 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தவானை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் தொடக்க வீரராக உருவெடுத்த இவரை பிசிசிஐ அடுத்த தலைமுறை கேப்டனாகவும் வளர்க்க நினைத்தது.

KL Rahul

ஆனால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சமீப காலங்களில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு ராகுல் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைக்கு காரணமாகும் வகையில் அமைந்ததால் துணை கேப்டன் பதவியையும் ஓப்பனிங் இடத்தையும் இழந்து தற்போது விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடும் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் அந்த இடத்தில் விளையாடி சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் ஓப்பனிங் இடத்தில் புதிய பந்தில் தடுமாறுவதை விட மிடில் ஆர்டரில் பழைய பந்தில் விளையாடுவது தமக்கு சாதகத்தையும் சவுகரியத்தையும் கொடுப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே அந்த இடத்தில் விளையாட தன்னிடம் பேசி சம்மதிக்க வைத்த ரோகித் சர்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போட்டி முடிந்த பின் பேசிய ராகுல் இனிமேல் இந்த இடத்தில் அசத்தப்போவதை பார்ப்பீர்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “5வது இடத்தில் உங்களுக்கு நேரடியாக சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த சமயங்களில் பந்து நன்றாக பேட்டுக்கு வருகிறது. எனவே அந்த இடத்தில் நீங்கள் விளையாடுங்கள் என்று ரோகித் சர்மா என்னிடம் தெளிவாக பேசி சம்மதப்படுத்தினார்”

Rahul

“மேலும் ஓப்பனிங் இடத்தில் அவசரமாக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற கட்டாயம் 5வது இடத்தில் விளையாடும் போது இருப்பதில்லை என்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த இடத்தில் விளையாடும் போது காலை வைத்து குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு விளையாடும் அளவுக்கு உங்களுக்கு தேவையான போதிய நேரம் கிடைக்கிறது. அதே சமயம் அந்த இடத்தில் சற்று அதிகப்படியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் விரும்பினால் அதுக்கேற்றால் போல் என்னால் முடிந்தளவுக்கு முயற்சிப்பேன். அனைத்தையும் விட அணிக்காக என்ன தேவைப்படுகிறது என்ற மனநிலையுடன் விளையாடுவதற்கு இந்த இடம் உதவுகிறது” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது ஓப்பனிங் இடத்தில் விளையாடும் போது ஸ்விங் பந்துகளால் திணறடிக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் அதிரடியாக விளையாடியே தீர வேண்டும் என்ற நிலைமையை விட மிடில் ஆர்டரில் சுழல் பந்து வீச்சாளர்களை பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைமை தமக்கு மிகவும் பிடித்துள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

KL-Rahul

இதையும் படிங்க:50, 100 சதங்கள் அடிச்சும் என்ன புண்ணியம், அவங்களிடம் நாம தோத்துட்டமே – விராட் கோலியை மீண்டும் கம்பீர் விமர்சித்தது என்ன

ஆனால் நேற்றைய போட்டியில் இலக்கு குறைவாக இருந்ததாலும் விக்கெட்டுகள் கைவசம் இருந்ததாலும் அவருடைய அணுகுமுறை மற்றும் தடவலான பேட்டிங் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ஒருவேளை இலக்கு பெரிதாக இருந்தால் அவரது இந்த அணுகுமுறை வேலை செய்யுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement