ஒரு ரசிகனா யார் வீட்டுக்கு முன்னாடி நிக்குறேன் தெரியுமா? இன்ஸ்டாகிராமில் ரவீந்திர ஜடேஜா ஆனந்தம்

Ravindra Jadeja 6
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 3 – 1* என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தையும் தக்க வைத்துள்ளது.

மேலும் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களை வைத்து இத்தொடரில் இங்கிலாந்து அணியை இந்தியா தோற்கடித்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. முன்னதாக முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

ஜடேஜா ஆனந்தம்:
3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றின் மகத்தான கேப்டனாக 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற எம்எஸ் தம்முடைய ஊரில் இந்திய அணி விளையாடும் போதெல்லாம் நேரடியாக வந்து ஆதரவு கொடுத்து இளம் வீரர்களுக்கு ஆலோசனை கொடுப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் இம்முறையும் 4வது போட்டியை காண அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வேறு வேலை இருந்தால் இம்முறை இந்திய அணியை பார்க்க தோனி வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ராஞ்சியில் உள்ள ரிங் ரோட்டில் இருக்கும் தோனியின் பண்ணை வீட்டுக்கு அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு செல்வதற்கு முன்பாக தோனியின் வீட்டு வாசலில் நின்று 3 கோணங்களில் முகம் நிறைந்த புன்னகையுடன் ஜடேஜா புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அதை “ஜாம்பவானின் வீட்டுக்கு முன்பாக ஒரு ரசிகனாக புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று ஜடேஜா பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக “ராஞ்சிக்கு வந்து விட்டு தமக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த தோனியின் வீட்டுக்கு செல்லாமல் போனால் எப்படி” என்ற வகையில் ஜடேஜா அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக தன்னுடைய முன்னாள் கேப்டனை நேரில் சந்தித்த ஜடேஜா அடுத்ததாக தோனி தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார்.

இதையும் படிங்க: சல்யூட் அவங்களுக்கானது.. தோனியுடன் கம்பேர் பண்ண மாட்டேன்.. துருவ் ஜுரேல் தந்தை.. கண்ணீர் மல்க பேட்டி

கடந்த வருடம் குஜராத்துக்கு எதிராக நடந்த ஃபைனலில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அபாரமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜடேஜா சென்னை ஐந்தாவது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அவரை தோனி தன்னுடைய இடுப்பில் தூக்கி வைத்து உணர்ச்சிப்பூர்வமாக கொண்டாடியது மறக்க முடியாததாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement