சல்யூட் அவங்களுக்கானது.. தோனியுடன் கம்பேர் பண்ண மாட்டேன்.. துருவ் ஜுரேல் தந்தை.. கண்ணீர் மல்க பேட்டி

Dhruv Jurel father
- Advertisement -

ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக இத்தொடரின் 3வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான துருவ் ஜுரேல் 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 177/7 என இந்தியா தடுமாறிய போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து 90 ரன்கள் அடித்து காப்பாற்றினார்.

குறிப்பாக தனது அரை சதத்தை 1999 கார்கில் போரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தன்னுடைய தந்தைக்காக அவர் சல்யூட் அடித்துக் கொண்டாடியது ரசிகர்களின் நெகிழ்ச்சியடைய வைத்தது. அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களை சேசிங் செய்யும் போது கடைசி நேரத்தில் தடுமாறிய இந்திய அணியை 32* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பெருமையுடன் தந்தை:
அத்துடன் அழுத்தமான நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படும் அவர் அடுத்த எம்எஸ் தோனியாக உருவாகும் பாதையில் இருப்பதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியிருந்தார். இந்நிலையில் நான்காவது போட்டியில் தன்னுடைய மகன் அடித்த சல்யூட் இந்திய ராணுவம் மற்றும் மக்களுக்கானது என்று துருவ் ஜுரேல் தந்தை நேம் சந்த் பெருமிதத்துடன் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் தோனியுடன் தம்முடைய மகனை ஒப்பிடவில்லை என்று தெரிவிக்கும் அவர் இதுப் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“நான் ராணுவத்தைச் சேர்ந்தவன். எனவே என்னுடைய கட்டுக்கோப்பை தெரிந்த துருவ் ஜுரேல் நான் ராணுவ உடையில் சல்யூட் அடித்ததை பார்த்து வளர்ந்தவர். அதனால் அரை சதமடித்த போது சல்யூட் அடித்து கொண்டாடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அந்த சல்யூட் எனக்கு மட்டுமல்ல இந்திய ராணுவ மற்றும் மக்கள் அனைவருக்குமானது. இந்தியாவுக்காக 20 வருடங்கள் விளையாடி நட்சத்திரமாக இருக்கும் சுனில் கவாஸ்கர் போன்றவர் அப்படி சொன்னது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது”

- Advertisement -

“அனில் கும்ப்ளே, சேவாக் போன்றவர்களும் துருவைப் பற்றி பேசினார்கள். ஆனால் நான் தோனியுடன் ஒப்பிடப் போவதில்லை. இந்தியாவுக்காக 2 உலகக் கோப்பைகளை வென்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் தோனியுடன் என்னுடைய மகனை எப்போதும் ஒப்பிட மாட்டேன். ஆனால் முன்னாள் வீரர்கள் என்னுடைய மகனை ஒப்பிடுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாங்கள் எங்கள் மகனை ராணுவத்தில் சேர விரும்பினோம்”

இதையும் படிங்க: அறிமுகப்போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்பிற்கு கடைசி போட்டியில் அடித்துள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

“அதற்காக என்டிஏ தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அவரை வற்புறுத்தினேன். ஆனால் வேறு மாதிரி சிந்தித்த அவர் “கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் அப்பா” என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் 10 – 11 வயதிலேயே கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய அவர் பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்காததால் நான் திட்டினேன். ஆனால் அம்மா மீது அவர் அதிக அன்பைக் கொண்டவர். எனவே அம்மா தான் துருவ் படித்துக் கொண்டே கிரிக்கெட்டிலும் விளையாடட்டும் என்று ஆதரவைக் கொடுத்தார்” எனக் கூறினார்.

Advertisement