அறிமுகப்போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்பிற்கு கடைசி போட்டியில் அடித்துள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Akash
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு முன்னணி வீரர்கள் இந்திய அணியில் இருந்து விலகிய வேளையில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இதுவரை இந்த தொடரில் இந்திய அணிக்காக ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய நான்கு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் படிகல்லுக்கும் அறிமுக வாய்ப்பு கிடைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி விளையாடியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது அவர் பந்துவீசவில்லை என்றாலும் அவரது செயல்பாடு திருப்தி அளிக்கும் விதமாக இருந்ததால் அவருக்கான வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் தொடர விரும்புகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நான்காவது போட்டியின் போது ஓய்வெடுத்துக் கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்பினாலும் அவருக்கு பதிலாக முகமது சிராஜுக்கே ஓய்வு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : என்ன சொன்னா என்ன பண்றாரு பாருங்க.. சொதப்பல் கம்பேக் கொடுத்த இஷான் கிஷானை.. விளாசும் ரசிகர்கள்

இதன் காரணமாக அறிமுகப் போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்பிற்கு கடைசி போட்டியிலும் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சமீப காலமாக இந்திய அணியில் வெவ்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வரும் வேளையில் இவருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement