என்ன சொன்னா என்ன பண்றாரு பாருங்க.. சொதப்பல் கம்பேக் கொடுத்த இஷான் கிஷானை.. விளாசும் ரசிகர்கள்

Ishan kishan 4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் இசான் கிசான் கடந்த டிசம்பர் மாதம் தெனனாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகினார். குறிப்பாக கடந்த ஒரு வருடமாக இந்திய அணியுடன் பயணித்து விளையாடியதால் ஏற்பட்ட பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐயிடம் கேட்டார். அதற்கு பிசிசிஐ உடனடியாக அனுமதியும் கொடுத்தது.

ஆனால் அப்போது இந்தியாவுக்கு சென்று தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு பயணித்து 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்கத் தவறினார். அதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் தேர்வு செய்ய ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி தயாராக இருங்கள் என்று இஷான் கிசானுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கினார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
ஆனால் அதைக் கேட்காத இஷான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் இணைந்து 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். அதனால் கடுப்பான பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள வீரர்கள் அனைவரும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் அவருடைய பேச்சையும் கேட்காத இஷான் கிசான் தன்னுடைய ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் தொடர்ந்து புறக்கணித்தார். இந்த நிலையில் மும்பையில் பிப்ரவரி 27ஆம் தேதி டிஒய் பாட்டில் டி20 தொடர் துவங்கியது. அதில் ரூட் மொபைல் லிமிடெட் அணிக்கு எதிராக ஆர்பிஐ அணிக்காக இசான் கிசான் விளையாடினார்.

- Advertisement -

அந்த வகையில் 2 மாதங்கள் கழித்து முதல் முறையாக விளையாடிய அவர் 2 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்டு நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் 19 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். அதை பார்த்த ரசிகர்கள் “ரஞ்சிக் கோப்பையில் விளையாடுங்கள் என்று சொன்னால் ராகுல் டிராவிட் போன்ற யாருடைய பேச்சையும் மதிக்காமல் இங்கே விளையாடுகிறீர்களா” என்று இஷான் கிசான் மீது சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பவிருக்கும் பும்ரா – அவருக்கு பதிலா வெளியேறப்போவது யார் தெரியுமா?

இருப்பினும் யாருடைய பேச்சையும் கேட்காத அவர் அடுத்ததாக ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். அதில் சிறப்பாக விளையாடி 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாக இசான் இசான் முயற்சிக்க உள்ளார். ஆனாலும் ஜெய் ஷா, ராகுல் டிராவிட் ஆகியோரின் பேச்சைக் கேட்காததால் ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டாலும் அவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement