5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பவிருக்கும் பும்ரா – அவருக்கு பதிலா வெளியேறப்போவது யார் தெரியுமா?

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு 3 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி அசத்தி விட்டது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியிடம் தொடரை இழந்த இங்கிலாந்து அணி இந்த கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் காத்திருக்கிறது.

- Advertisement -

அதேவேளையில் ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை நிகழ்த்த இந்திய அணியும் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சுழற்சி முறையில் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட வேளையில் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியின் போது ஓய்வெடுத்துக் கொண்டார்.

இருப்பினும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் இணைவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக நான்காவது போட்டியில் விளையாடியிருந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிற்கு ஐந்தாவது போட்டியின் போது ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தொடர்ச்சியாக 3 போட்டிகளில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : அப்படி ஒன்னும் கட்டாயமில்ல.. இனிமேல் அந்த வீரர்களுக்கு சான்ஸ் கொடுக்க மாட்டோம்.. கேப்டன் ரோஹித் அறிவிப்பு

இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை என்றாலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement