அப்படி ஒன்னும் கட்டாயமில்ல.. இனிமேல் அந்த வீரர்களுக்கு சான்ஸ் கொடுக்க மாட்டோம்.. கேப்டன் ரோஹித் அறிவிப்பு

Rohit Sharma 6
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலிருந்து பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்லி வெளியேறிய இசான் கிசான் மேற்கொண்டு உள்ளூரில் விளையாடாமல் இருந்தார்.

அப்போது இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய ரஞ்சிக்கோப்பையில் விளையாடுங்கள் என்று அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை கொடுத்தார். அதை கேட்காத இஷான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதே போல 2வது போட்டியில் காயமடைந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ நிர்வாகம் அறிவுறுத்தியது.

- Advertisement -

ரோஹித் சர்மா கருத்து:
ஆனால் பரோடாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக அவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அந்த வகையில் சமீப காலங்களாகவே ரஞ்சிக் கோப்பையை முக்கிய வீரர்கள் புறக்கணித்து வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று ஆர்வமும் பசியும் உள்ளவர்கள் மட்டுமே ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவார்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

எனவே இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற பசியுடன் யார் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்குத் தான் வாய்ப்பு கொடுப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான பசி இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைப்பதில் என்ன பயன்? எங்களுடைய அணியில் பசி இல்லாத வீரர்கள் யாரும் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“எங்களுடைய அணியில் இருக்கும் மற்றும் இல்லாத பையன்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகின்றனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுக்கு குறைவான வாய்ப்புகள் தான் கிடைக்கும். அதை நீங்கள் பயன்படுத்தாமல் போனால் அது விலகி சென்று விடும். எங்களுக்கு ஐபிஎல் நல்ல ஃபார்மட்டாக இருக்கிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகள் தான் வெற்றிகரமாக செயல்படுவதற்கு மிகவும் கடினமான ஃபார்மட்டாகும்”

இதையும் படிங்க: மருத்துவமனையில் அறுவைசிகிச்சையை முடித்த இந்திய வீரர் முகமது ஷமிக்கு – வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி

“அதில் நீங்கள் வெல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். கடைசி 3 போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி எளிதாக கிடைக்கவில்லை. அதற்கு பவுலர்கள் நீண்ட நேரம் பந்து வீச வேண்டும். பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் விளையாட வேண்டும். அது மிகவும் கடினம். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்ட வீரர்களுக்கு மட்டுமே நாங்கள் வாய்ப்புக் கொடுப்போம்” என்று கூறினார்.

Advertisement