மருத்துவமனையில் அறுவைசிகிச்சையை முடித்த இந்திய வீரர் முகமது ஷமிக்கு – வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி

Modi-and-Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் தொடர்ந்து பந்துவீசி இருந்தார் என்பதை உலகக் கோப்பையின் முடிந்த பின்னர் அவரே தெரிவித்திருந்தார். மேலும் அந்த காயத்திலிருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக இந்திய அணியில் இருந்தும் வெளியேறியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரில் பயிற்சியினை மேற்கொண்டு இருந்தார். இருப்பினும் அவரது காயம் குணமடையாத வேளையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் சார்பாக லண்டன் சென்ற அவர் அந்த வலிக்கான ஊசியையும் செலுத்திக்கொண்டார்.

- Advertisement -

ஆனாலும் அவரது வலி குறையவில்லை என்பதற்காக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது லண்டனுக்கு சென்றுள்ள அவர் தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்துள்ளார். மேலும் அதனை தனது சமூகவலைத்தள பக்கத்தின் மூலமாகவும் பகிர்ந்துள்ளார்.

இதன் காரணமாக அவர் இன்னும் சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரை தவறவிடுவார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாக்கின. அதோடு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான பந்துவீச்சாளராக செயல்பட்ட முகமது ஷமி எதிர்வரும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாத சூழலும் ஏற்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் லண்டனில் அறுவை சிகிச்சை முடித்துக் கொண்டதை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள முகமது ஷமிக்கு பலரும் ஆறுதல் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய பிரதமரான நரேந்திர மோடி அவருக்கு தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ரஜத் பட்டிதாருக்கு பதிலாக 5 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட அறிமுக வீரருக்கு வாய்ப்பு – யார் அந்த வீரர்?

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். முகமது ஷமி நீங்கள் மிகவும் தேவையான தைரியத்துடன் இந்த காயத்தை சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement