ரஜத் பட்டிதாருக்கு பதிலாக 5 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட அறிமுக வீரருக்கு வாய்ப்பு – யார் அந்த வீரர்?

Padikkal
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது விளையாடி வருகிறது. இன்று தொடரின் முதல் நான்கு போட்டிகளில் முடிவடைந்துள்ள வேளையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அதற்கு அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற்று நடைபெற உள்ளது. இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்த தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் நான்கு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் பெஞ்ச்சில் இருக்கும் சில வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் ரஜத் பட்டிதார் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் விராட் கோலிக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமான ரஜத் பட்டிதார் இதுவரை மூன்று போட்டியில் தொடர்ச்சியாக விளையாடியும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்திய ஏ அணி சார்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதம் அடித்து அசத்திய அவர் உள்ளூர் தொடர்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் வந்தாலும்.. ஜுரேல் அவரை மாதிரி சாதிக்கப் போவதை தடுக்க முடியாது.. அனில் கும்ப்ளே

இதன் காரணமாக அவருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நான்கு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் ஐந்தாவதாக இவருக்கும் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டால் அது சாதனையாகவும் அமைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement