ரிஷப் பண்ட் வந்தாலும்.. ஜுரேல் அவரை மாதிரி சாதிக்கப் போவதை தடுக்க முடியாது.. அனில் கும்ப்ளே

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சுமாராக விளையாடிய கே.எஸ். பரத்துக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் முதல் வாய்ப்பிலேயே 46 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.

அதைத் தொடர்ந்து ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில் 177/7 என இந்தியா தடுமாறிய போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து 90 ரன்கள் அடித்து காப்பாற்றிய அவர் 2வது இன்னிங்ஸில் 39* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். அப்படி அழுத்தமான நேரத்தில் அபாரமாக விளையாடியதால் 22 வருடங்கள் கழித்து அறிமுக தொடரிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் வந்தாலும்:
மேலும் விழிப்புணர்வுடன் பொறுமையாக விளையாடும் விதத்தை வைத்து அவர் அடுத்த எம்எஸ் தோனியாக உருவாகும் வழியில் இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியிருந்தார். ஆனால் காயமடைந்துள்ள முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் வந்தாலும் எம்எஸ் தோனியின் உயரத்தை துருவ் ஜுரேல் எட்டுவார் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் ரிஷப் பண்ட் இருக்கிறார். அவர் வரும் போது என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ரிஷப் விரைவாக விளையாட வர வேண்டுமென்று நம்புகிறேன்”

- Advertisement -

“ஆனால் அதே சமயம் எம்எஸ் தோனி தன்னுடைய கேரியரில் என்ன உயரத்தை எட்டினாரோ அதே உச்சத்தை தொடுவதற்கான திறமைகள் துருவ் ஜூரேலிடம் இருக்கிறது. கடந்த போட்டியில் அவர் துடுப்பாட்டம் ஆடுவதற்கான டெக்னிக் மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாடுவதற்கான டெக்னிக்கையும் காண்பித்தார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஒரு கட்டத்திற்கு பின் பெரிய சிக்சர்களை அடித்து டெய்ல் எண்டருடன் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்த அவர் கீப்பராகவும் அசத்தினார்”

இதையும் படிங்க: விராட் கோலி மாதிரி அவரையும் சந்தேகப்பட்டாங்க.. இப்போ என்னாச்சு பாருங்க.. விமர்சங்களுக்கு கெவின் பீட்டர்சன் பதிலடி

“வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தகுந்தார் போல் அசத்திய அவர் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக சில நல்ல கேட்ச்சுகளை பிடித்தார். அந்த வகையில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் இன்னும் முன்னேறுவார். அதனால் கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஏனெனில் இவ்வளவு திறமை கொண்டிருப்பதாலேயே வெறும் 15 உள்ளூர் போட்டிகளில் விளையாடியதும் ஜுரேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement