விராட் கோலி மாதிரி அவரையும் சந்தேகப்பட்டாங்க.. இப்போ என்னாச்சு பாருங்க.. விமர்சங்களுக்கு கெவின் பீட்டர்சன் பதிலடி

Kevin Pieterson 5
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் இளம் வீரர் சுப்மன் கில் முதல் போட்டியில் அரை சதம் கூட அடிக்காமல் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

சொல்லப்போனால் கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்த அவர் 2023 பார்டர் – கவாஸ்கர் தோப்பைக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திணறி வந்தார். அதனால் அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இரண்டாவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் சதமடித்த அவர் 104 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பீட்டர்சன் பதிலடி:
ஆனால் ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில் மீண்டும் டக் அவுட்டான அவர் ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அதே போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் அடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.

இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் சேசிங் செய்யும் போது நங்கூரமாக நின்று விளையாடிய அவர் 52* ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். அந்த வகையில் இந்த தொடரில் தெளிவான செயல்பாடுகளை வெளிப்படுத்தாவிட்டாலும் அழுத்தத்தின் பிடியில் இந்தியா சிக்கிய நேரங்களில் நன்றாகவே விளையாடிய சுப்மன் கில் தன்னுடைய திறமையை நிரூபித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த போது விராட் கோலியை சந்தேகித்து அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்ததை போல இத்தொடரில் பலரும் சுப்மன் கில் திறமையை சந்தேகித்ததாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். எனவே இனியும் அவருடைய திறமையை பற்றி யாரும் சந்தேகப்பட வேண்டாம் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள பீட்டர்சன் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்தியாவிடம் தோத்துருக்கலாம்.. ஆனா 18 மாசத்துல இங்கிலாந்து அதை செஞ்சுருக்கு.. மெக்கல்லம் பேட்டி

“அவர்கள் விராட் கோலி தடுமாறிய போது சந்தேகப்பட்டதை போலவே சுப்மனையும் சந்தேகத்தினர். அதை செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்க உள்ளது. அந்த போட்டியில் வென்று இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement