இந்தியாவிடம் தோத்துருக்கலாம்.. ஆனா 18 மாசத்துல இங்கிலாந்து அதை செஞ்சுருக்கு.. மெக்கல்லம் பேட்டி

Brendon Mccullum 3
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இத்தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்ததை இங்கிலாந்து செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் அதற்கடுத்த 3 போட்டிகளில் தேவைப்படும் நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. அதனால் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தலைகுனியும் பரிதாப தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

18 மாசம்:
மறுபுறம் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஆஷஸ் தொடரை தொடர்ந்து இந்திய தொடரிலும் தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

ஆனால் 18 மாதத்திற்கு முன் சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவதற்கு தடுமாறிய இங்கிலாந்து அணி தற்போது பன்மடங்கு உயர்ந்து கடைசி 8 தொடர்களில் 4 வெற்றி 3 டிராவை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே தம்முடைய தலைமையில் இங்கிலாந்து அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பெருமிதத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் இங்கே தோற்றுள்ளோம். 2 – 2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை வெல்லவில்லை. ஆனால் 18 மாதங்களுக்கு முன்பிருந்த அணியை விட தற்போது நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். எனவே அடுத்த 18 மாதங்கள் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்கள் சில ஸ்பெஷலானதை சாதிப்போம். எங்களுடைய அணியில் இருக்கும் சில குறைகளை தொடர்ந்து நாங்கள் உளியை வைத்து சரி செய்கிறோம்”

இதையும் படிங்க: எல்லாம் ஜெய் ஷா பவர்.. வசமாக சிக்கியதால் வேறு வழியின்றி வழிக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. திரும்பிய சுந்தர்

“இந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருப்பது மோசமல்ல” என்று கூறினார். மேலும் இத்தொடரில் சுமாராக செயல்பட்ட ஓலி ராபின்சன், ஜானி பேர்ஸ்டோ போன்ற தங்களுடைய வீரர்களுக்கும் அவர் ஆதரவை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்க உள்ளது. அதில் வென்று இத்தொடரை உயரமாக முடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து தயாராகி வருகிறது.

Advertisement