எல்லாம் ஜெய் ஷா பவர்.. வசமாக சிக்கியதால் வேறு வழியின்றி வழிக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. திரும்பிய சுந்தர்

jay shah 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் காயத்தை சந்தித்து வெளியேறினார். அதனால் கடைசி மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று குணமடையும் வேலைகளில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின் அவருடைய காயத்தை பற்றிய சோதனை நிகழ்த்தப்பட்டது.

அதில் முழுமையாக குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கொண்டு எந்த காயத்தையும் சந்திக்கவில்லை என்பதால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக என்சிஏ விளையாட்டு அறிவியல் மற்றும் உடல்நல பிரிவு தலைமை நிர்வாகி நித்தின் படேல் பிசிசிஐக்கு மெயில் அனுப்பினார். அதன் காரணமாக பரோடாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி போட்டியில் மும்பை அணிக்காக அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

வழிக்கு வந்த ஸ்ரேயாஸ்:
ஆனால் லேசாக முதுகு வலி இருப்பதால் அப்போட்டியில் விளையாட முடியாது என்று வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எச்சரிக்கை விடுத்தார்.

அது போக ரஞ்சிக்கோப்பையில் விளையாடாமல் போனால் 2023 – 2024 காலாண்டுக்கான இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ரஞ்சிக்கோப்பை விளையாட மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது மார்ச் 2ஆம் தேதி துவங்க உள்ள தமிழ்நாட்டுக்கு எதிரான செமி ஃபைனலில் விளையாடுவார் என்று மும்பை வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஜெய் ஷா கொடுத்த எச்சரிக்கையால் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளார் என்றே சொல்லலாம். அது போக மும்பைக்கு எதிராக நடைபெற உள்ள செமி ஃபைனலில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாட்டு அணிக்காக மீண்டும் களமிறங்க உள்ளார்.

இதையும் படிங்க: எந்த பால் ஆடுனாலும் ஜெயிக்கணும்ன்னா.. அந்த இந்திய வீரரை பாத்து கத்துக்கோங்க.. இங்கிலாந்துக்கு கும்ப்ளே அறிவுரை

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் வாய்ப்பு பெறாமல் இருந்து வந்த அவர் தற்போது இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே 2016க்குப்பின் 7 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள தமிழ்நாட்டு அணியில் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் விளையாட உள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement