எந்த பால் ஆடுனாலும் ஜெயிக்கணும்ன்னா.. அந்த இந்திய வீரரை பாத்து கத்துக்கோங்க.. இங்கிலாந்துக்கு கும்ப்ளே அறிவுரை

Anil Kumble 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து நான்காவது போட்டியின் முடிவிலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. முன்னதாக இத்தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர்.

இருப்பினும் முதல் போட்டியில் வென்ற அந்த அணி அடுத்த 3 போட்டிகளில் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அனைத்து நேரங்களிலும் அதிரடியாகவே விளையாட முயற்சித்து தோல்வியை சந்தித்தது. அதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளதால் இங்கிலாந்து அணியின் பஸ்பால் அணுகுமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளது.

- Advertisement -

கும்ப்ளே அறிவுரை:
இந்நிலையில் எந்த பால் விளையாடினாலும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி காண முடியும் என்று இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். எனவே அதிரடியாக விளையாடக்கூடிய சுப்மன் கில் இத்தொடரில் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் நிதானமாக விளையாடி முக்கிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றியதை இங்கிலாந்து பார்க்க வேண்டும் என்று கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் வெல்வது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் அதை பஸ்பால் அல்லது எந்த பால் என்று அழைத்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். அதனாலேயே கடந்த தசாப்தம் முழுவதும் ஒரு தொடரில் கூட சொந்த மண்ணில் தோற்காமல் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே அவர்களுடைய பவுலிங் அட்டாக் இந்திய பேட்டிங்கை சாய்க்க முடியவில்லை”

- Advertisement -

“முக்கிய வீரர்கள் இல்லாததால் அனுபவமற்ற பேட்டிங்கை கொண்டிருந்த இந்திய அணியை தோற்கடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கிலாந்து அறிவார்கள். ஆனால் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ போன்ற இங்கிலாந்தின் சீனியர் பேட்ஸ்மேன்கள் இத்தொடரில் தொடர்ந்து ரன்கள் அடிக்கவில்லை. ஜோ ரூட்டும் நான்காவது போட்டியை தவிர்த்து அடிக்கவில்லை. அங்கே தான் அவர்கள் வெற்றி தவற விட்டதாக கருதுகிறேன்”

இதையும் படிங்க: ரோஹித் சொல்ற மாதிரி.. பணமே முக்கியம்.. அவங்கல்லாம் இந்தியா மீது விஸ்வாசம் இல்லாதவங்க.. காவஸ்கர் விளாசல்

“நீங்கள் அதிரடியாக விளையாடுவேன் என்று சொல்வது நல்லது. ஆனால் அதை அனைத்து நேரமும் செய்ய முடியாது. பொதுவாக சுப்மன் கில் ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பதை விரும்புவார். ஆனால் நீங்கள் நின்று விளையாட வேண்டும். அது தான் டெஸ்ட் கிரிக்கெட்டாகும். அது சூழ்நிலைகளைப் பொறுத்தது. அதையே ரூட் ராஞ்சியில் செய்தார். அதை செய்ததால் அவர் வெற்றிகரமாக செயல்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எனவே இங்கிலாந்து இதைப் பற்றி விவாதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement