ரோஹித் சொல்ற மாதிரி.. பணமே முக்கியம்.. அவங்கல்லாம் இந்தியா மீது விஸ்வாசம் இல்லாதவங்க.. காவஸ்கர் விளாசல்

Sunil Gavaskar 7
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் காயத்தால் பாதியிலேயே வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே குணமடைந்து விட்டதாக என்சிஏ அறிக்கை கொடுத்தது. அதனால் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று சொல்லி விளையாடவில்லை.

அதற்கு முன்பாகவே ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக கேட்டுக் கொண்டும் இசான் கிசான் அதை செய்யவில்லை. அப்போது ஃபிட்டாக இருக்கும் வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கேட்டுக்கொண்டார். ஆனாலும் அந்த 2 வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
அந்த நிலையில் மிகவும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் சாதிக்க வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே நாங்கள் வாய்ப்பு கொடுப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். மேலும் இப்போது அனைத்து வீரர்களிடமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான பசி இல்லை என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த கருத்தை வைத்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் போன்ற வீரர்களை சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “அவர் சொல்வது முற்றிலும் சரி. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதவர்களை நீங்கள் பார்க்க வேண்டாமென நான் பல வருடங்களாக சொல்லி வருகிறேன். இந்திய கிரிக்கெட்டால் தான் அந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம், பெயர், புகழ் ஆகிய அனைத்தும் இந்திய கிரிக்கெட்டால் கிடைத்தது”

- Advertisement -

“எனவே அந்த வீரர்களும் அதற்கான விஸ்வாசத்தை இந்திய கிரிக்கெட்டின் மீது காட்ட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத விருப்பமில்லாத வீரர்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்யாதது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாகும். ஒருவேளை அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கலாம். ரோகித் சொன்னது போல அவர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான பசியும் திறமையும் இல்லாமல் இருக்கலாம்”

இதையும் படிங்க: அடுத்தடுத்த 3 போட்டிகளில் சொதப்பிய இந்திய வீரர்.. 5 ஆவது போட்டியில் இருந்து – நீக்கப்பட வாய்ப்பு

“அதனால் அவர்கள் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் விளையாடாதது பற்றி எதுவும் செய்ய முடியாது. இந்த நேரத்தில் ரஞ்சிக் கோப்பையை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிக்கும் அளவுக்கு அட்டவணையை அமைக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன். அதன் பின் நீங்கள் சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போன்ற வெள்ளைப் பந்து தொடர்களை நடத்தலாம். அப்படி டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீங்கள் அந்தத் தொடர்களை நடத்துவது ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement