அடுத்தடுத்த 3 போட்டிகளில் சொதப்பிய இந்திய வீரர்.. 5 ஆவது போட்டியில் இருந்து – நீக்கப்பட வாய்ப்பு

Rajat-Patidar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது.

விராட் கோலி, முகமது ஷமி, கே.எல் ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியதை அடுத்து பலரும் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த தொடரில் ஏற்கனவே நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட வேளையில் சுழற்சி முறையில் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்திருந்த ரஜத் பட்டிதார் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன் பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது இந்த மோசமான ஆட்டம் காரணமாக ஏற்கனவே அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள வேளையில் ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் அவர் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : தோனி மற்றும் டிராவிட் ஆகியோர் சாதனையை கேப்டனாக சமன் செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த போது நான்காவது போட்டியில் தன்னை நிரூபித்தால் தான் அடுத்த போட்டிக்கான பரிசீலனையில் இருப்பார் என்று பேசப்பட்ட வேளையில் ராஞ்சி நகரில் நடைபெற்ற முடிந்த போட்டியிலும் ரஜத் பட்டிதார் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement