தோனி மற்றும் டிராவிட் ஆகியோர் சாதனையை கேப்டனாக சமன் செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Ro-DH-DR
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்சில் 192 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் சுப்மன் கில் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதன் மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியிருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதனை தொடர்ந்து தற்போது 5 விக்கெட் வித்தியாசத்தில் நான்காவது போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா முன்னாள் கேப்டன்களான டிராவிட் மற்றும் தோனி ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அதாவது இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா தலைமையில் கிடைத்துள்ள ஒன்பதாவது வெற்றி இதுவாகும். இந்திய அணி சார்பாக விராட் கோலி 40 டெஸ்ட் வெற்றிகளுடன் முதல் இடத்திலும், தோனி 27 டெஸ்ட் வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும், கங்குலி 21 டெஸ்ட் வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும், அசாருதீன் 14 டெஸ்ட் வெற்றியுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது 9 வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி தான் இந்தமுறை ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கனும்.. என்னோட ஆசை அதுதான்.. ஏன் தெரியுமா? – ரெய்னா விருப்பம்

அதுமட்டும் இன்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டனாக விராட் கோலி 10 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து தோனி, டிராவிட், அசாருதீன் ஆகியோர் 3 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில் ரோகித் சர்மாவும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று வெற்றிகளை பெற்று அவர்களது சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement