ஆர்.சி.பி தான் இந்தமுறை ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கனும்.. என்னோட ஆசை அதுதான்.. ஏன் தெரியுமா? – ரெய்னா விருப்பம்

Rains-RCB
- Advertisement -

இந்தியாவில் மார்ச் மாதம் 22-ஆம் தேதி முதல் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து ஐ.பி.எல் அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடர் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதயிருக்கின்றன.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா கூறுகையில் :

- Advertisement -

இந்த முறை விராட் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், விராட் கோலியும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் நீண்ட காலமாகவே அவர்கள் ஒரு கோப்பையை கூட வெல்லாமல் உள்ளனர்.

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இம்முறை பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று நம்புகிறேன். ஒருமுறை கூட மகுடம் சூடாத அந்த அணி நிச்சயம் இந்தமுறை கோப்பையை கைப்பற்ற வேண்டும்.

- Advertisement -

விராட் கோலி உண்மையிலேயே இந்த முறை கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று நினைக்கிறேன். இத்தனை ஆண்டு காலமாக அவர் பெங்களூரு அணிக்காக கடுமையாக உழைத்துள்ளார். எதிர்வரும் டி20 உலக கோப்பையிலும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர் இந்திய அணிக்கு தேவை.

இதையும் படிங்க : 8.40 கோடிக்கு ஒர்த்.. 33 ஃபோர்ஸ் 12 சிக்ஸை பறக்க விட்ட ரைட் ஹேண்ட் ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

எத்தகைய இலக்கை விரட்டுவதிலும் விராட் கோலி ஒரு சேஸ் மாஸ்டர். அத்துடன் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்றாக தெரியும் என சுரேஷ் ரெய்னா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement