8.40 கோடிக்கு ஒர்த்.. 33 ஃபோர்ஸ் 12 சிக்ஸை பறக்க விட்ட ரைட் ஹேண்ட் ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

Sameer Rizvi
- Advertisement -

இந்தியாவில் 23 வயதிற்குட்பட்ட வீரர்கள் விளையாடி வரும் சிகே நாயுடு கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் உத்தரபிரதேசம் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப் பிரதேசம் அணிக்கு 184/3 என்ற ஸ்கோரில் கேப்டன் சமீர் ரிஸ்வி களமிறங்கினார்.

சமீப காலங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்த போட்டியில் சௌராஷ்டிரா பவுலர்களை ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கி சதமடித்தார். நேரம் செல்ல செல்ல எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இரட்டை சதமடித்தும் ஓயவில்லை.

- Advertisement -

8.40 கோடிக்கு ஒர்த்:
அந்த வகையில் தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் முச்சதம் அடித்து 33 பவுண்டரி மற்றும் 12 சிக்சருடன் 312 (266) ரன்களை விளாசி ஒரு வழியாக அவுட்டானார். அவருடன் ரிட்டுராஜ் சர்மா 132 (222) ரன்கள் எடுத்ததால் உத்திரபிரதேசம் தங்களுடைய முதல் இன்னிங்ஸை 684/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அப்படி இப்போட்டியில் அதிரடியாக வெளுத்து வாங்கிய ரிஸ்வி ஐபிஎல் 2024 தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

பொதுவாகவே அனுபவம் மிகுந்த 30 வயதிற்கும் அதிகமான வீரர்களை வாங்கக்கூடிய சென்னை கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக அதை இவரை 8.40 கோடி வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே அமைந்தது. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் சமீர் ரிஸ்வி உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஜாம்பவான் சுரேஷ் ரெய்னாவைப் போல் விளையாடுவதாக வல்லுநர்கள் பாராட்டினர்.

- Advertisement -

குறிப்பாக சுரேஷ் ரெய்னா வலது கை பேட்ஸ்மேனாக எப்படி விளையாடினால் இருக்குமோ அது போல இவர் செயல்படுவதாக முன்னாள் தமிழக வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு திறமை இருப்பதாலேயே அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது என்றே சொல்லலாம். அந்த நிலையில் ஐபிஎல் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தற்போது முச்சதம் அடித்துள்ள ரிஸ்வி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

இதையும் படிங்க: 337/9 டூ 569 ரன்ஸ்.. பரோடாவை சூறையாடிய டெயில் எண்டர் ஜோடி உலக சாதனை.. சிஎஸ்கே வீரர் வரலாற்று சாதனை

எனவே 8.40 கோடிக்கு தகுதியானவன் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் செயல்பட்டு வருவது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் 2024 தொடரில் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்கும் தோனி தலைமையிலான சென்னை தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement