என்னாது 10 வருஷமாச்சா.. 2023 உ.கோ முன் ஜடேஜா பேட்டிங் பற்றி – ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கும் மோசமான 3 புள்ளிவிவரம்

Ravindra Jadeja 2
- Advertisement -

உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கிய நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக நடைபெற்று முடிந்த 2023 ஆசிய கோப்பையில் கேஎல் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். அதே போல சமீப காலங்களில் தடுமாறிய ரோகித் சர்மா, கில், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முக்கியமான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பி விட்டார்கள்.

- Advertisement -

கவலையளிக்கும் ஜடேஜா:
சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று பார்க்கப்பட்ட சூரியகுமார் கூட ஆஸ்திரேலியா தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனால் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதப்படும் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் பேட்டிங்கில் கடந்த சில வருடங்களாகவே தடுமாறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்:

1. ஒரே ஒரு சிக்ஸர்: முதலாவதாக 7வது இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்ய வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வருடம் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இதுவரை அவர் வெறும் ஒரே 1 சிக்சர் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் ராஜ்கோட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி போட்டியில் தன்வீர் சங்காவுக்கு எதிராக சிக்ஸர் அடித்த அவர் அடுத்த பந்திலேயே அவுட்டானார். அவருடைய சுமாரான பேட்டிங் 2023 ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக தோல்வியை கொடுத்ததையும் மறக்க முடியாது.

- Advertisement -

2. சுமாரான ஸ்ட்ரைக் ரேட்: அதே போல டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் களமிறங்க போகும் அவர் 2020க்குப்பின் இதுவரை விளையாடிய 21 ஒருநாள் இன்னிங்ஸில் 448 ரன்களை 77.37 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் தான் எடுத்துள்ளார். இது 2020க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய இதர இந்திய வீரர்களை விட மிகவும் குறைவு என்பது கவலைக்குரிய இசையமாகும்.

இதையும் படிங்க: அஸ்வின் போலவே 2023 உ.கோ ஆஸி அணியில் கடைசி நேரத்தில் உள்ளே வந்த நட்சத்திர வீரர்.. இவருக்கும் லக் இருக்கு

3. 10 வருடம்: அதை விட இந்த உலகக்கோப்பை நடைபெறும் இந்திய மண்ணில் கடந்த 10 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த 2013ஆம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான போட்டியில் 61* ரன்கள் அவர் அடித்ததே கடைசி அரை சதமாகும்.

Advertisement