அஸ்வின் போலவே 2023 உ.கோ ஆஸி அணியில் கடைசி நேரத்தில் உள்ளே வந்த நட்சத்திர வீரர்.. இவருக்கும் லக் இருக்கு

Marnus Labuschange australia
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறுகிறது. அதற்காக அனைத்து நாடுகளும் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதை செய்து தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 28ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்திருந்தது.

அந்த சூழ்நிலையில் ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஆசிய கோப்பையில் அக்சர் படேல் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறினார். அதை சரியாக பயன்படுத்திய இந்திய தேர்வுக்குழுவினர் ஆஃப் ஸ்பின்னர் இல்லாத குறையை தீர்ப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி:
அதே போலவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியிலும் கடைசி நேரத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் தேர்வாகியுள்ளார். அதாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட் கமின்ஸ் தலைமையிலான 15 பேர் அணியில் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அஷ்டன் அகர் சமீபத்திய தென்ஆப்பிரிக்க தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறினார்.

மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட லபுஸ்ஷேன் அதே தென்னாப்பிரிக்க தொடரின் ஒரு போட்டியில் காயமடைந்த கேமரூன் கிரீனுக்கு பதிலாக சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்து தேர்வு குழுவை வருந்த வைத்தார். அத்துடன் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் கடைசி நேரத்தில் அவர் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அஷ்டன் அகர் வெளியில் உள்ளதால் தற்போது ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா மட்டுமே ஒரே ஸ்பின்னராக இருக்கிறார். ஆனாலும் கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோரும் தேவைப்படும் நேரங்களில் சுழல் பந்துகளை வீசுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை ஆஸ்திரேலிய தேர்வுக்குழு எடுத்துள்ளது

அதே சமயம் ட்ராவிஸ் ஹெட் விரைவில் குணமடைந்து விடுவார் என்பதால் உலகக் கோப்பை அணியில் மீண்டும் தேர்வாகியுள்ளார். ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:
பட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபௌட், அலெஸ் கேரி (கீப்பர்), கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மார்னஸ் லபுஸ்ஷேன், மிட்சேல் மார்ஷ், கிளன மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

Advertisement